• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 27, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பரதநாட்டிய கின்னஸ் சாதனை நிகழ்வில் பண மோசடி; பிரதி அமைச்சர் பிரதீப்புக்கு எதிராக முறைப்பாடு.!

Mathavi by Mathavi
June 27, 2026
in இலங்கை செய்திகள்.
0
பரதநாட்டிய கின்னஸ் சாதனை நிகழ்வில் பண மோசடி; பிரதி அமைச்சர் பிரதீப்புக்கு எதிராக முறைப்பாடு.!
Share on FacebookShare on Twitter

கொழும்பு, காலிமுகத்திடலில் அண்மையில் 5,000 பரதநாட்டியக் கலைஞர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கின்னஸ் சாதனை முயற்சியின் பின்னணியில், திட்டமிட்ட பாரிய பண மோசடி மற்றும் உழைப்புச் சுரண்டல் அரங்கேறியுள்ளன என்று கூறி, இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசாரச் செயலாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான துமிந்த நாகமுவ ஆகியோர் இணைந்து இந்த முறைப்பாட்டை ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளனர்.

முறைப்பாட்டைச் சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்கள்,
கடந்த ஜூன் 14ஆம் திகதி நடைபெற்ற இந்த நாட்டிய நிகழ்வானது, கலைச் சாதனை என்ற போர்வையில் இலங்கையிலுள்ள ஏழைத் தமிழ் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை ஏமாற்றி நடத்தப்பட்ட ஒரு அப்பட்டமான வணிகச் செயற்பாடு எனத் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் உத்தியோகபூர்வ முகப்புத்தகப் பதிவுகளின்படி, அவரது நேரடி வேண்டுகோள் மற்றும் வழிகாட்டலின் கீழேயே ‘சங்கமம் குளோபல் அக்கடமி’ மற்றும் ‘சங்கமளியா ஹாலிடேஸ்’ ஆகிய தனியார் நிறுவனங்கள் இந்த நாட்டிய நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஓர் அரச பிரதி அமைச்சர் நேரடியாகச் சம்பந்தப்பட்ட தேசிய அளவிலான விவகாரத்தில், முற்றிலும் தனியார் நிறுவனங்கள் மூலம் நாட்டிய மாணவர்களிடமிருந்து தலா 4,500 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு, அவை அரச திறைசேரிக்குச் செல்லாமல் தனியார்களின் பெயர்களிலுள்ள வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளன என்று அவர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர்.

இந்த நிகழ்வுக்கு எந்தவொரு அமைச்சோ அல்லது அரச துறையோ முறையான நிதி உத்தரவாதத்தையோ அல்லது தணிக்கைக் கட்டுப்பாட்டையோ வழங்கவில்லை. இது போன்றதொரு வரலாற்று நிகழ்வை இலங்கை கலாச்சார அமைச்சு அல்லது சுற்றுலாத்துறை அமைச்சு மூலம் உத்தியோகபூர்வமாக நடத்தியிருந்தால், அதன் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான வருமானம் நாட்டுக்குக் கிடைத்து மீண்டும் எமது மக்களுக்கே சென்றிருக்கும். ஆனால், இங்கு தனியாருக்குச் சாதகமான முறையில் பிரதி அமைச்சர் சட்டவிரோதமாகச் செயற்பட்டுள்ளார் என்று அவர்கள் சாடினர்.

தற்போது பிரம்மாண்ட நிகழ்வு முடிவடைந்த பின்னரும், மாணவர்களுக்கான பங்களிப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்காக அந்தத் தனியார் நிறுவனங்கள் மேலும் 2,500, 3,000 மற்றும் 12,000 ரூபா எனத் தொடர்ந்து பணம் கேட்டுப் பெற்றோர்களை வற்புறுத்தி வருவதாகத் தெரிவித்த செயற்பாட்டாளர்கள், தூரப் பிரதேசங்கள் மற்றும் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து வந்த நடுத்தர வர்க்க மாணவர்களுக்குத் தங்குமிடமோ, உணவோ அல்லது பாதுகாப்போ ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், சொந்தச் செலவில் வந்த மாணவர்களுக்கு 25,000 முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை கடன் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டனர்.

இலங்கை மாணவர்களின் அரும் உழைப்பையும், கலைத் திறனையும் சுயநலமாகப் பயன்படுத்தி, இந்தியாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனமும், ஒரு நாட்டிய ஆசிரியை மட்டுமே உலகச் சாதனைப் பட்டத்தைப் பெறுவதற்காக எமது நாட்டு மக்களின் உழைப்பு கொடூரமாகச் சுரண்டப்பட்டுள்ளது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் இது தொடர்பான அனைத்து வங்கிப் பரிமாற்ற ரசீதுகள் மற்றும் முகப்புத்தக ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட செயற்பாட்டாளர்கள், உடனடியாக இது குறித்து விசேட விசாரணை நடத்தப்பட்டு, ஏழை மாணவர்களிடம் ஏமாற்றி வசூலிக்கப்பட்ட பணம் மீண்டும் முழுமையாகத் திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பிரதி அமைச்சர் இதற்கு நாடாளுமன்றிற்கும் நாட்டிற்கும் முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் வலுவாக வலியுறுத்தியுள்ளனர்.

Related Posts

ஈஸ்டர் தாக்குதலில் கம்மன்பிலவுக்கும் தொடர்பா? – நாடாளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கேள்வி.!

ஈஸ்டர் தாக்குதலில் கம்மன்பிலவுக்கும் தொடர்பா? – நாடாளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கேள்வி.!

by Mathavi
June 27, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணி மற்றும் சுரேஷ் சலே தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் தற்போதைய செயற்பாடுகள்...

வடக்கு மாகாண ஆளுநர் லண்டன் பயணம்.!

வடக்கு மாகாண ஆளுநர் லண்டன் பயணம்.!

by Mathavi
June 27, 2026
0

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு வார கால அவசிய சுற்றுப் பயணமாக வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது.!

by Mathavi
June 27, 2026
0

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டை தயாரித்து மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (26)...

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
June 27, 2026
0

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று சனிக்கிழமை (27) அதிகாலை பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று தியத்தலாவை ரயில் பாதைக்கு அருகில் சுமார்...

உயர் நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களால் நீதித்துறை முடக்கம்.!

உயர் நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களால் நீதித்துறை முடக்கம்.!

by Mathavi
June 27, 2026
0

உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் நீதியரசர் வெற்றிடங்கள் நிரப்பப்படாததன் காரணமாக நீதித்துறையில் ஏற்பட்டுள்ள முடக்கம் குறித்து, நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் ஒன்றை நடத்துவதற்கான விசேட பிரேரணை...

ருவன்வெலிசாய சூடாமணிக்கல்லில் 1,500 கோடி ரூபாய் இரத்தினக்கல் கொள்ளை; சி.ஐ.டியில் முறைப்பாடு.!

ருவன்வெலிசாய சூடாமணிக்கல்லில் 1,500 கோடி ரூபாய் இரத்தினக்கல் கொள்ளை; சி.ஐ.டியில் முறைப்பாடு.!

by Mathavi
June 27, 2026
0

வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுரம் ருவன்வெலிசாய மகா சாய விகாரையின் கோபுர உச்சியில் அமைந்துள்ள சூடாமணிக்கல்லில் பதிக்கப்பட்டிருந்த, சுமார் 1,500 கோடி ரூபாய் அதிகூடிய சந்தை மதிப்புடைய அரிய...

வவுனியா மாநகரசபை முதல்வர் பதவி நீக்கம்; கண்டன போராட்டம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்.!

வவுனியா மாநகரசபை முதல்வர் பதவி நீக்கம்; கண்டன போராட்டம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்.!

by Mathavi
June 26, 2026
0

வடமாகாண ஆளுநர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வவுனியா மாநகரசபையின் முதல்வரை, முதல்வர் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கியிருப்பது ஜனநாயக விழுமியங்களுக்கு முரணான நடவடிக்கை. மக்களால்...

தெல்தெனிய கொ*லை சம்பவம்; நால்வருக்கு விளக்கமறியல்.!

தெல்தெனிய கொ*லை சம்பவம்; நால்வருக்கு விளக்கமறியல்.!

by Mathavi
June 26, 2026
0

நுவரெலியாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பெண் வைத்தியர் தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அவரது...

பனைநின்றான் கிராமத்திற்கான வீதி, பாலத்தின் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி.!

பனைநின்றான் கிராமத்திற்கான வீதி, பாலத்தின் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி.!

by Mathavi
June 26, 2026
0

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் பாலமும் அதனோடிணைந்த ஒருபகுதி வீதி என்பவற்றின் சீரமைப்புப் பணிகள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம்.!

போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம்.!

by Mathavi
June 26, 2026
0

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி 'போதைக்கு எதிராக ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் பிரஜா சக்தியின் ஏற்பாட்டில் மன்னார் மூர் வீதி கிராமத்தில் இன்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி