• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 23, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் முக்கிய பேச்சு.!

Mathavi by Mathavi
June 22, 2026
in இலங்கை செய்திகள்.
0
அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் முக்கிய பேச்சு.!
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் கலாநிதி பால் கபூர், இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து இருதரப்புப் பேச்சுகளை முன்னெடுத்தார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான 77 ஆண்டு நீண்டகால இருதரப்பு உறவுகள் இதன்போது விரிவாக நினைவு கூரப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவானது வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு, சுற்றுலா மற்றும் இருதரப்பு மக்கள் தொடர்புகள் போன்ற துறைகளின் ஊடாகச் சிறந்த பன்முக ஒத்துழைப்பாக வளர்ச்சியடைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்துத் தனது மகிழ்ச்சியை வெளியிட்ட அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர், அந்த ஒத்துழைப்பைத் தொடர்ச்சியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் சூழ்நிலைகள் சாதகமான திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றமை இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டதுடன், ஜூன் 19ஆம் திகதி எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம் பிராந்தியத்தை நிலையான அமைதியை நோக்கி இட்டுச் செல்லும் என இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்தனர்.

அந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை பின்பற்றிய மனிதாபிமானக் கொள்கையை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கடந்த மார்ச் மாதம் இலங்கை கடல் எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளான இரு கப்பல்களுக்குச் சட்டபூர்வமான அடிப்படையில் மனிதாபிமான உதவிகளை வழங்க இலங்கை நடவடிக்கை எடுத்தது என்றும் குறிப்பிட்டார். இதற்காக இலங்கை எடுத்த காத்திரமான நடவடிக்கைகளை அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் இதன்போது வெகுவாகப் பாராட்டினார். அத்துடன், பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை தனது அதிகபட்ச ஆதரவை எப்போதும் வழங்கும் என்றும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.

இலங்கையின் ஏற்றுமதியில் தனி நாடாகப் பெரும் பங்கை அமெரிக்கா கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் வர்த்தக ஒத்துழைப்பை இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் மேம்படுத்துவது குறித்தும், இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரிகள் குறித்தும் இதன்போது பிரதான கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையைப் போன்ற சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாட்டை, அமெரிக்கா போன்ற பாரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாட்டுடன் ஒப்பிட முடியாது என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பது கடினமான காரியம் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் பணிகளை விரைவில் நிறைவு செய்வது அவசியமானது என்றும் குறிப்பிட்டார். இது குறித்து இரு தரப்பினரும் உடன்பாடுகளை எட்டினர்.

இந்த விசேட சந்திப்பில், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோருடன், இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பதில் தூதுவர் ஜேன் ஹாவல், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிரேஷ்ட பொருளாதார நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் மெத்தியூ ரிட்ஜ்வே, அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் பிரிவின் தலைவர் ஷைலஜா கிம் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

ஆடைத்துறை வர்த்தகர்களுடன் ஜனாதிபதி உயர்மட்டப் பேச்சு.!

ஆடைத்துறை வர்த்தகர்களுடன் ஜனாதிபதி உயர்மட்டப் பேச்சு.!

by Mathavi
June 22, 2026
0

டொலர் வருமானத்தை அதிகரித்து, நாட்டில் பலமானதொரு ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஆடைத் துறையின் பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் குறித்து ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார...

ஒலுமடுவில் தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

ஒலுமடுவில் தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

by Mathavi
June 22, 2026
0

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய மாணவர்களுக்கு வவுனியா தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள்...

ஐ.எம்.எவ். நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாதீர்கள்.!

ஐ.எம்.எவ். நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாதீர்கள்.!

by Mathavi
June 22, 2026
0

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாது, நாட்டின் அறிவுசார் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் புத்தகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியை அரசு உடனடியாக...

வட்டுக்கோட்டையில் கொடூர தாக்குதல்.!

வட்டுக்கோட்டையில் கொடூர தாக்குதல்.!

by Mathavi
June 22, 2026
0

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது கத்தியால் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேலும்...

சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே.!

சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே.!

by Mathavi
June 22, 2026
0

இலங்கை அரசியல் வரலாற்றில் சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி...

அரசியல் எதிரிகளை ஒடுக்க நீதித்துறையில் அரசு தலையீடு.!

அரசியல் எதிரிகளை ஒடுக்க நீதித்துறையில் அரசு தலையீடு.!

by Mathavi
June 22, 2026
0

நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியில் தலையீடு செய்து, தங்களுக்குத் தேவையான முறையில் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்குத் தற்போதைய அரசு மிகக்...

அரசமைப்பு பொது வரைவைத் தயாரிக்க 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு தெரிவு.!

அரசமைப்பு பொது வரைவைத் தயாரிக்க 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு தெரிவு.!

by Mathavi
June 22, 2026
0

தமிழ்த் தரப்பு சார்பில் பொதுவாக எவ்வாறானதொரு அரசியல் அமைப்பை முன்வைக்க வேண்டும் என்பது தொடர்பாக, பரந்துபட்ட மக்கள் கலந்துரையாடலை மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை உள்வாங்கிய ஒரு வரைவைத்...

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்.!

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்.!

by Mathavi
June 22, 2026
0

தமது வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான முறையான வேலைத்திட்டமோ அல்லது முறையான தீர்மானங்களோ அரசால் இதுவரை அறிவிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீனவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகச்...

இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.!

இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இன்று மதியம் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சஹ்ரான் தங்கியிருந்த அறை விவரம் மறைப்பு.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சஹ்ரான் தங்கியிருந்த அறை விவரம் மறைப்பு.!

by Mathavi
June 22, 2026
0

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற சங்கிரில்லா ஹோட்டலில், தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் தங்கியிருந்த 116ஆம் இலக்க அறையில் அவருக்கு முன்னர் தங்கியிருந்தவர்களின் விவரங்கள் மாத்திரம் மறைக்கப்பட்டுள்ளன...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி