• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 23, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சஹ்ரான் தங்கியிருந்த அறை விவரம் மறைப்பு.!

Mathavi by Mathavi
June 22, 2026
in இலங்கை செய்திகள்.
0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சஹ்ரான் தங்கியிருந்த அறை விவரம் மறைப்பு.!
Share on FacebookShare on Twitter

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற சங்கிரில்லா ஹோட்டலில், தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் தங்கியிருந்த 116ஆம் இலக்க அறையில் அவருக்கு முன்னர் தங்கியிருந்தவர்களின் விவரங்கள் மாத்திரம் மறைக்கப்பட்டுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து தற்போதைய அரசு தீவிரமாகத் தேடிப் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
“உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற தினத்துக்கு முன்தினமான 2019 ஏப்ரல் 20ஆம் திகதி இரவில், சஹ்ரானும் அவருடன் இருந்த மற்றொரு நபரும் கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலின் 116ஆம் இலக்க அறைக்கு வந்து தங்கியுள்ளனர். மறுநாள் ஏப்ரல் 21ஆம் திகதி காலையிலேயே அவர்கள் இந்தக் கொடூர தாக்குதலை நடத்தியிருந்தார்கள்.

இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, பாதுகாப்புத் தரப்பினரால் சங்கிரில்லா ஹோட்டல் அறைகளில் அதற்கு முந்தைய இரண்டு வார காலப்பகுதியில் தங்கியிருந்த அனைத்துப் பயணிகளினதும் விவரங்கள் மற்றும் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

இருப்பினும், சஹ்ரான் தங்கியிருந்த 116ஆம் இலக்க அறையில், அவருக்கு முன்னர் தங்கியிருந்தவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் மாத்திரம் எங்கும் பதியப்படவில்லை. எந்தவொரு விவரப் பதிவுகளும் இல்லாமல் ஒரு சர்வதேச ஹோட்டலில் யாருக்கு அவ்வாறு அறைகள் வழங்கப்பட முடியும்? மிகவும் செல்வாக்குமிக்க முக்கிய பிரமுகர்களுக்கு மாத்திரமே அவ்வாறான சலுகைகள் வழங்கப்பட முடியும்.

அப்படியானால், சஹ்ரான் வருவதற்கு முன்னர் அந்த அறையில் தங்கியிருந்த அந்த முக்கிய பிரமுகர்கள் யார்? இந்த விவரங்கள் அனைத்தும் ஏற்கனவே நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் போது வெளிவந்த உண்மைகளாகும்.

அத்துடன், சஹ்ரான் இருந்த அறையின் கதவைத் திறப்பதற்கு டிஜிட்டல் இலத்திரனியல் அட்டை ஒன்று விநியோகிக்கப்பட்டுள்ளதும், அதனைப் பயன்படுத்தி கதவு திறக்கப்பட்டுள்ளதும் தரவுகளில் பதிவாகி இருக்கின்றன. ஆனால், அந்த அறையில் அதற்கு முன் தங்கியிருந்த நபர் யார் என்பது விடுபட்டுள்ளது.

உலகில் ஹோட்டல் பதிவுகள் ஏதுமின்றி தங்கும் சலுகை மிக முக்கியமான சில உயர்மட்டப் பிரமுகர்களுக்கு மட்டுமே காணப்படுகின்றது. எனவே, அங்கு தங்கியிருந்தவர்கள் யார் என்பதை இந்த அரசு உடனடியாகத் தேடிப் பார்க்க வேண்டும். இவ்வாறான பல மறைக்கப்பட்ட உண்மைகள் தற்போதைய புதிய விசாரணைகளின் மூலம் வெளிவரும் என நாங்கள் எதிர்பார்க்கினறோம்.” – என்றார்.

Related Posts

ஆடைத்துறை வர்த்தகர்களுடன் ஜனாதிபதி உயர்மட்டப் பேச்சு.!

ஆடைத்துறை வர்த்தகர்களுடன் ஜனாதிபதி உயர்மட்டப் பேச்சு.!

by Mathavi
June 22, 2026
0

டொலர் வருமானத்தை அதிகரித்து, நாட்டில் பலமானதொரு ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஆடைத் துறையின் பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் குறித்து ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார...

ஒலுமடுவில் தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

ஒலுமடுவில் தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

by Mathavi
June 22, 2026
0

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய மாணவர்களுக்கு வவுனியா தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள்...

ஐ.எம்.எவ். நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாதீர்கள்.!

ஐ.எம்.எவ். நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாதீர்கள்.!

by Mathavi
June 22, 2026
0

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாது, நாட்டின் அறிவுசார் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் புத்தகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியை அரசு உடனடியாக...

வட்டுக்கோட்டையில் கொடூர தாக்குதல்.!

வட்டுக்கோட்டையில் கொடூர தாக்குதல்.!

by Mathavi
June 22, 2026
0

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது கத்தியால் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேலும்...

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் முக்கிய பேச்சு.!

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் முக்கிய பேச்சு.!

by Mathavi
June 22, 2026
0

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் கலாநிதி பால் கபூர், இன்று திங்கட்கிழமை...

சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே.!

சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே.!

by Mathavi
June 22, 2026
0

இலங்கை அரசியல் வரலாற்றில் சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி...

அரசியல் எதிரிகளை ஒடுக்க நீதித்துறையில் அரசு தலையீடு.!

அரசியல் எதிரிகளை ஒடுக்க நீதித்துறையில் அரசு தலையீடு.!

by Mathavi
June 22, 2026
0

நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியில் தலையீடு செய்து, தங்களுக்குத் தேவையான முறையில் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்குத் தற்போதைய அரசு மிகக்...

அரசமைப்பு பொது வரைவைத் தயாரிக்க 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு தெரிவு.!

அரசமைப்பு பொது வரைவைத் தயாரிக்க 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு தெரிவு.!

by Mathavi
June 22, 2026
0

தமிழ்த் தரப்பு சார்பில் பொதுவாக எவ்வாறானதொரு அரசியல் அமைப்பை முன்வைக்க வேண்டும் என்பது தொடர்பாக, பரந்துபட்ட மக்கள் கலந்துரையாடலை மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை உள்வாங்கிய ஒரு வரைவைத்...

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்.!

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்.!

by Mathavi
June 22, 2026
0

தமது வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான முறையான வேலைத்திட்டமோ அல்லது முறையான தீர்மானங்களோ அரசால் இதுவரை அறிவிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீனவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகச்...

இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.!

இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இன்று மதியம் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி