• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 23, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அரசியல் எதிரிகளை ஒடுக்க நீதித்துறையில் அரசு தலையீடு.!

Mathavi by Mathavi
June 22, 2026
in இலங்கை செய்திகள்.
0
அரசியல் எதிரிகளை ஒடுக்க நீதித்துறையில் அரசு தலையீடு.!
Share on FacebookShare on Twitter

நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியில் தலையீடு செய்து, தங்களுக்குத் தேவையான முறையில் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்குத் தற்போதைய அரசு மிகக் கேவலமான முறையில் முயற்சிக்கின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒரு ஜனநாயக நாட்டில் சட்டத்தின் ஆட்சி என்பது மிக முக்கியமானதொன்றாகும். பொதுமக்கள் தேர்தல்களின் போது ஏமாற்றப்பட்டு, தகுதியற்ற நபர்களுக்கு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வழங்கிய பல உதாரணங்கள் அண்மைய வரலாற்றில் உள்ளன. அவ்வாறான சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தி, ஜனநாயகக் கட்டமைப்புக்குள் சமநிலையைப் பேணுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரே நிறுவனம் நீதிமன்றமாகும். நாட்டின் எந்தவொரு குடிமகனுக்கும் அநீதி இழைக்கப்படும் போது அவர்கள் நாடக்கூடிய ஒரே இடம் நீதிமன்றம் மட்டுமே.

ஆனால், இன்று நாட்டின் நீதித்துறை மற்றும் சட்டத்தின் ஆட்சியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கும், அதனை அழிப்பதற்கும் தற்போதைய அரசு வெட்கமற்ற முறையில் முயற்சிப்பதை நாம் காண்கின்றோம். முன்னர் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசின் காலத்திலும் சட்டத்தின் ஆட்சி இவ்வாறுதான் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. அப்போது தற்போதைய ஜனாதிபதி ஊழல், ஒழிப்புக் குழுவின் முக்கிய பதவியை வகித்ததுடன், தற்போதைய பொலிஸ் அமைச்சர் அதன் செயலாளராகவும், ஷானி அபேசேகர சி.ஐ.டியின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டு சட்டத்தை முழுமையாகத் தவறாகப் பயன்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று அதே குழுவினர் மீண்டும் ஒன்றிணைந்து சட்டத்தை வளைக்க முற்படுகின்றனர்.

அரசைச் சேர்ந்த நீதி அமைச்சர் நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டே, ‘தங்கள் அரசு ஆட்சியில் இல்லாவிட்டால் இவ்வாறான தீர்ப்பு கிடைத்திருக்காது’ என்று பகிரங்கமாகக் கூறுகின்றார். மறுபுறம் ஜனாதிபதி மே தினப் பேரணியில் உரையாற்றும் போது ‘நாட்களைக் கணக்கிட்டு சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்’ என எச்சரிக்கின்றார். இவை ஒரு ஜனநாயக சமூகத்துக்கு மிக மோசமான முன்னுதாரணங்கள் என்பதுடன், இவ்வாறான கருத்துக்கள் நீதிபதிகளின் கௌரவத்தைப் பாதித்து அவர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கின்றன.

தற்போது உயர் நீதிமன்றத்தில் 4 நீதிபதிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த நியமனங்களைச் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ள போதிலும், இந்த வெற்றிடங்களை நிரப்பாமல் இழுத்தடிப்பதன் மூலம் அனைத்து நீதிபதிகளையும் தங்களது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கவே அரசு முயற்சிக்கின்றது.

அரசமைப்பின் 107 ஆவது உறுப்புரையின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வுபெறும் வயதை மாற்றுமாறு நாட்டின் சட்ட வல்லுநர்களோ அல்லது சமூகமோ இதுவரை எந்தவொரு கோரிக்கையையும் விடுக்காத பின்னணியில், தங்களுக்குச் சாதகமான நீதிபதிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசு தற்போது முயற்சித்து வருகின்றது என்று எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு சட்டத்தரணிகள் சங்கம் ஏற்கனவே கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கும், தங்களுக்குத் தேவையானவாறு தீர்ப்புகளை எழுதுவதற்கும் நீதிமன்றத்தைக் கையாள்வதே இதன் பின்னாலுள்ள உண்மையான நோக்கமாகும்.

அதேபோல், இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் அண்மையில் மேற்கொண்ட தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக இதுவரை எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை. அரசின் ஊழல்களைப் பற்றி அறிந்திருந்த நபர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். அரசின் தவறுகளை வெளிப்படுத்திய நந்தன குணதிலக்கவின் மரணம் இன்றுவரை ஒரு மர்மமாகவே நீடிக்கின்றது.

எனவே, பொதுமக்கள் கடந்த காலங்களில் எந்தக் கட்சிக்கு வாக்களித்திருந்தாலும் அது முக்கியமல்ல. ஆனால் இலங்கைப் பிரஜை என்ற ரீதியில் தங்களுடைய சுதந்திரமும், தங்களது பிள்ளைகளின் எதிர்காலச் சுதந்திரமும் முக்கியமென்றால், அரசின் இந்த தன்னிச்சையான மற்றும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வீதியில் இறங்கிப் போராட வேண்டும்.” – என்றார்.

Related Posts

ஆடைத்துறை வர்த்தகர்களுடன் ஜனாதிபதி உயர்மட்டப் பேச்சு.!

ஆடைத்துறை வர்த்தகர்களுடன் ஜனாதிபதி உயர்மட்டப் பேச்சு.!

by Mathavi
June 22, 2026
0

டொலர் வருமானத்தை அதிகரித்து, நாட்டில் பலமானதொரு ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஆடைத் துறையின் பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் குறித்து ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார...

ஒலுமடுவில் தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

ஒலுமடுவில் தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

by Mathavi
June 22, 2026
0

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய மாணவர்களுக்கு வவுனியா தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள்...

ஐ.எம்.எவ். நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாதீர்கள்.!

ஐ.எம்.எவ். நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாதீர்கள்.!

by Mathavi
June 22, 2026
0

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு மாத்திரம் அடிபணியாது, நாட்டின் அறிவுசார் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் புத்தகங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியை அரசு உடனடியாக...

வட்டுக்கோட்டையில் கொடூர தாக்குதல்.!

வட்டுக்கோட்டையில் கொடூர தாக்குதல்.!

by Mathavi
June 22, 2026
0

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது கத்தியால் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேலும்...

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் முக்கிய பேச்சு.!

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் முக்கிய பேச்சு.!

by Mathavi
June 22, 2026
0

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் கலாநிதி பால் கபூர், இன்று திங்கட்கிழமை...

சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே.!

சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே.!

by Mathavi
June 22, 2026
0

இலங்கை அரசியல் வரலாற்றில் சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி...

அரசமைப்பு பொது வரைவைத் தயாரிக்க 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு தெரிவு.!

அரசமைப்பு பொது வரைவைத் தயாரிக்க 33 பேர் கொண்ட வழிநடத்தல் குழு தெரிவு.!

by Mathavi
June 22, 2026
0

தமிழ்த் தரப்பு சார்பில் பொதுவாக எவ்வாறானதொரு அரசியல் அமைப்பை முன்வைக்க வேண்டும் என்பது தொடர்பாக, பரந்துபட்ட மக்கள் கலந்துரையாடலை மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை உள்வாங்கிய ஒரு வரைவைத்...

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்.!

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்.!

by Mathavi
June 22, 2026
0

தமது வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான முறையான வேலைத்திட்டமோ அல்லது முறையான தீர்மானங்களோ அரசால் இதுவரை அறிவிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீனவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகச்...

இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.!

இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இன்று மதியம் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சஹ்ரான் தங்கியிருந்த அறை விவரம் மறைப்பு.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சஹ்ரான் தங்கியிருந்த அறை விவரம் மறைப்பு.!

by Mathavi
June 22, 2026
0

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற சங்கிரில்லா ஹோட்டலில், தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் தங்கியிருந்த 116ஆம் இலக்க அறையில் அவருக்கு முன்னர் தங்கியிருந்தவர்களின் விவரங்கள் மாத்திரம் மறைக்கப்பட்டுள்ளன...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி