உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
25 பார்வைகள்

தமது வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான முறையான வேலைத்திட்டமோ அல்லது முறையான தீர்மானங்களோ அரசால் இதுவரை அறிவிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீனவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகச் சத்தியாகிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு கிடைக்கும் வரை இன்றும் நாளையும் அவர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவே தங்கியிருந்து இந்தப் போராட்டத்தைத் தொடரத் தீர்மானித்துள்ளனர் என்று அகில இலங்கை மீனவர் சங்கத்தின் செயலாளர் ஆர். ஏ. டில்ருக் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதுடன், தமக்கான நிரந்தரத் தீர்வை ஜனாதிபதி பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0