உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஆண்டின் மீதமுள்ள அரைப்பகுதிக்குள் திட்டங்களை விரைந்து செயற்படுத்துங்கள்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
25 பார்வைகள்

    இவ் வருடத்தின் எஞ்சியுள்ள மாதங்களுக்குள் திட்டங்கள் அனைத்தும் துரிதமாக நிறைவுறுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கிப் பணிகளை முன்கொண்டு செல்ல வேண்டும்.” என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நா.வேதநாயகனின் பங்குபற்றுதலுடன் இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

    யாழ்ப்பாணம் மாவட்டசெயலாளர் ம.பிரதீபனின் வரவேற்புரையைத் தொடர்ந்து, வடக்கு மாகாண ஆளுநர் தனது இணைத் தலைமையுரையை ஆற்றினார்.

    இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,

    “அனைவரும் தமது பெறுமதியான நேரத்தைச் செலவிட்டே இவ்வாறான கூட்டங்களில் பங்கேற்கின்றனர். எனவே, இந்தக் கூட்டத்தை மிகவும் வினைத்திறனாகவும் ஆரோக்கியமான முறையிலும் முன்கொண்டு செல்ல அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.” – என்று கேட்டுக்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து தலைமையுரையாற்றிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர்,

    “இங்கு வருகை தந்துள்ள அனைவரும் கற்றவர்கள். எனவே, அனைவரையும் பரஸ்பரம் கௌரவமாக நடத்த வேண்டும்.” – என்று வலியுறுத்தினார்.

    அத்துடன், வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் வீதி அபிவிருத்தித் திணைக்களமானது தனது வேலைத்திட்டங்களை மிகவும் வேகமாக முன்னெடுத்து வருவதாகவும், மேலதிக வேலைகளைக் கூட அவர்கள் தாமாகவே கோரிப் பெற்றுச் செய்வதாகவும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

    இம்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பல விடயங்கள் ஆராயப்பட்டன.

    இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் தனித்தனியாக ஆராயப்பட்டன. குறிப்பாக, மாவட்ட செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள், மத்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் மாகாண சபையால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் என அனைத்தும் தனித்தனியாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

    கூட்டத்தின் மீள்குடியேற்றம் தொடர்பில் நீண்ட நேரம் விரிவாக ஆராயப்பட்டது.

    கட்டடங்களுக்கான குடிபுகு சான்றிதழானது தனியாருக்கு மாத்திரமன்றி, அரச கட்டடங்கள் மற்றும் திணைக்களங்களுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என ஆளுநரால் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

    கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் ஊடாக மாவட்டக் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபையின் அவைத் தலைவர் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்பட்டது.

    இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகர பிரதி மேயர், நகர மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண கடற்படைத் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் உயர் அதிகாரிகள், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
    மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

    தொடர்புடைய செய்திகள் NEW

    இலங்கை செய்திகள்

    22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

    அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

    21 0 0
    இலங்கை செய்திகள்

    காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

    சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

    59 0 0
    இலங்கை செய்திகள்

    மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

    மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

    52 0 0
    இலங்கை செய்திகள்

    அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

    சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

    60 0 0