• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களில் உள்ளோர் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும்.!

Mathavi by Mathavi
June 19, 2026
in இலங்கை செய்திகள்.
0
தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களில் உள்ளோர் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

தமிழக அரசியல் மாற்றம் ஜனநாயகத்திற்கு நல்லது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்பிராந்திய மாநிலங்களில் உள்ள முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முதன்முறையாக தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சருக்கு கொழும்பில் பாராட்டு விழா நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று வியாழக்கிழமை (18) முற்பகல் சென்றார். அவரை திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் ஹபிபுல்லாஹ், மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது ஆகியோர்
சால்வை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர், அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது ,

கேள்வி : வெளிநாடுகளில் இலங்கையில் தான் முதன் முதலில் இசைமுரசு நாகூர் ஈ.எம். ஹனிபாவின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டது. அதேபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முதன்முதலில் இடம்பெற்றுள்ள அமைச்சருக்கு பாராட்டு விழா எதுவும் நடத்தப்படுமா?

பதில் : இந்தியா யூனியன் முஸ்லிம் லீக்கில் முதன்முறையாக அமைச்சரவையில் பங்கேற்ற அமைச்சர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது தொடர்பாக கட்சி ரீதியாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,
நிச்சயமாக பாராட்டு விழா குறித்து விரைவில் திகதி முடிவு செய்யப்படும்.

கேள்வி : தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி செயற்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன ?

பதில்: தமிழகத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. இதற்கு முன்பு ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஒரு வித்தியாசமான அணியினர், எதிர்பாராத வகையில் ஒரு பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.

ஜனநாயகத்தில் இதுபோன்ற இடைக்கால மாற்றங்கள் வருவது நல்லது. முந்தைய ஆட்சியாளர்கள் தமிழகத்தைக் கொண்டு நிறுத்திய இடத்திலிருந்து, இந்தப் புதிய ஆட்சியாளர்கள் மாநிலத்தை இன்னும் அடுத்தகட்ட முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழக வெற்றிக் கழகம் நல்ல முறையில் சிறப்பாக செயற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கேள்வி : இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு என்ன?

பதில் : மீனவர் பிரச்சினை என்பது இரு தரப்பிலும் மனிதாபிமான ரீதியாக அணுகப்பட வேண்டிய ஒரு விஷயம். சட்ட மீறல்கள் என்ற விவகாரத்தையும் தாண்டி, மக்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இரு தரப்பிலும் சில விட்டுக்கொடுப்புகளோடு இதற்கு சுமூக முடிவு காணப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில அரசும், மத்திய அரசும், இலங்கையின் மத்திய அரசு மற்றும் யாழ். குடாநாட்டு மீனவர் சமூகத்தோடு இணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். எங்களது மீன்பிடித்துறை அமைச்சர் ஏற்கனவே தமிழகத்திற்கு வந்து, இங்குள்ள அரசியல் தலைமைகளுடனும் மத்திய அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது ராஜதந்திர மட்டத்தில் பேசித் தீர்க்கப்பட வேண்டிய விவகாரம் என்பதால், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து இப்போது கருத்துக் கூறுவது கடினம்.

இலங்கை மக்களின் தற்போதைய வாழ்வாதாரம் மற்றும் விலைவாசி உயர்வு குறித்துப் பேசுகையில், தற்போதைக்கு விலைவாசி விவகாரத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. நாளுக்கு நாள் விலைவாசி ஏறிக்கொண்டுதான் செல்கிறது.

மத்திய கிழக்கு யுத்தத்தை பொறுத்தவரை, மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு இன்னும் அநேக நாட்கள் எஞ்சியுள்ளன. அது சுமுகமாக முடிந்தாலும், அதன் சாதகமான பலன்களை அனுபவிக்க இன்னும் 2 முதல் 3 மாதங்கள் ஆகும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே, உலகளாவிய இந்த யுத்த சூழ்நிலைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமைகளையும், ஏற்கனவே இலங்கையில் உள்ள பொருளாதார வீழ்ச்சியையும் சேர்த்து சமாளிப்பது என்பது தற்போதைய அரசுக்கு மிக சவாலான காரியமாக உருவெடுத்துள்ளது .

தி.மு.க அரசாக இருந்தாலும் சரி, தமிழக வெற்றிக் கழகமாக இருந்தாலும் சரி, இரு நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்க மத்திய அரசுடன் இணைந்துதான் செயற்பட வேண்டும்.

சர்வதேச நாணய மாற்று விகிதத்தில் இலங்கை நாணயம் சந்தித்துள்ள வீழ்ச்சி, இறக்குமதியாளர்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. கச்சா எண்ணெய், பயிர் உரம் (பசளை) போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான இறக்குமதி இதனால் முடங்கியுள்ளது.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கையின்படி கடன்களை மறுசீரமைப்பு செய்ய எங்களுக்கு இரண்டு வருட கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கச்சா (மசகு) எண்ணெய் மற்றும் இதர அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக எங்களின் அந்நியச் செலாவணி இருப்பு வேகமாக கரைந்து வருகிறது. சர்வதேச நாணயநிதி எதிர்பார்த்த அளவை விட கையிருப்பு குறைந்து வருவது நாட்டுக்கு மேலும் ஒரு பாரிய கடன் சுமையை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தக் கடன் சுமையைச் சமாளிப்பது எப்படி என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நாம் ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும் அல்லது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களிலும் தற்போதைய இலங்கை அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட தென்பிராந்திய மாநிலங்களில் உள்ள முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். அதற்கான தாராளமான ஊக்குவிப்பு தொகைகளையும், சாதகமான சூழலையும் ஏற்படுத்தித் தர இலங்கை அரசு தயாராக இருக்கிறது. அதனை நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

கேள்வி : இலங்கை இந்தியா இடையே உறவுகள் எப்படி இருக்கிறது

பதில் : இலங்கையில் பொருளாதார சரிவு ஏற்பட்டது. எங்களுக்கு இந்தியா பெரும் அளவில் உதவி செய்ததது. ரூ. 4000 பில்லியன் டொலர்கள் உதவி செய்ததை மறக்க முடியாது. எங்கள் உறவு தொப்புள் கொடி உறவு. எப்போதும் இந்தியாவோடு நெருங்கி உறவுகளுவோடு தான் இருக்கிறோம்.

விலைவாசி விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை நாளுக்குநாள் ஏறிக்கொண்டு செல்கிறது, ஈரான் அமெரிக்கா இடையே மோதல் முடிவுக்கு வந்தாலும் நிலைமை சீராக இரண்டு மூன்று மாதங்கள் ஆகும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள், யுத்தத்தினால் ஏற்பட்ட சுமை மற்றும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் மீண்டு வருவது ஒரு சவாலான விஷயம்.

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பாக, வட பிராந்தியத்தின் மீனவர் சமுதாயம் நெகிழ்ச்சி போக்கை கையாள்வது பற்றி அரசு அவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறது. இலங்கை மீன்வளத்துறை அமைச்சு மத்திய, மாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது. ராஜதந்திர மட்டத்தில் இதற்கான முடிவுகள் எட்டப்படுவது தான் சிறந்தது. சட்டரீதியாக நீதிமன்றத்தில் உள்ள விவகாரங்கள் பற்றி பேச முடியாது.

தி.மு.கவாக இருந்தாலும் சரி, தமிழக வெற்றி கழகமாக இருந்தாலும் சரி இரண்டு நாடுகளிடையே உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மத்திய அரசுடன் பேசி தான் தீர்வு காண வேண்டும், இரு அரசுகளும் இலங்கை அரசுடன் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஒத்துழைப்பு தர அனைவரும் தயாராக இருக்கிறார்கள் என்றார்.

Related Posts

பொதுமன்னிப்பு வழங்கினால் செம்மணி உண்மைகளை கூறுவேன்; உண்மையைக் கூற நினைப்பவர் இவ்வாறு கோருவாரா?

பொதுமன்னிப்பு வழங்கினால் செம்மணி உண்மைகளை கூறுவேன்; உண்மையைக் கூற நினைப்பவர் இவ்வாறு கோருவாரா?

by Mathavi
June 21, 2026
0

"பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தின் பிரதான குற்றவாளியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் நேரில்...

சிறுவனைத் தாக்கிய நால்வர் கைது.!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி; ஆறு பெண்கள் கைது.!

by Mathavi
June 21, 2026
0

கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், மூன்று தாய்லாந்து பெண்கள் உட்பட ஆறு பெண்கள்...

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் உண்மையில் ஓர் அர்த்தமற்ற நாடகமே.!

சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் உண்மையில் ஓர் அர்த்தமற்ற நாடகமே.!

by Mathavi
June 21, 2026
0

"சுரேஷ் சலேயின் உணவு தவிர்ப்புப் போராட்டம் முற்றிலும் அர்த்தமற்ற ஒன்றாகும். ஒரு முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பிரதானியாக அவர் குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கக்கூடாது." -...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரம் ஒட்டுமொத்த நாட்டுக்குரியது.!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரம் ஒட்டுமொத்த நாட்டுக்குரியது.!

by Mathavi
June 21, 2026
0

"காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னமும் அந்தத் துயரமான துன்பத்தில் இருந்து மீளாத மக்களாகவே வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு நஷ்டஈடாக வெறும் பணத்தை வழங்குவதன் மூலமாக இந்த மன...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது.!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது.!

by Mathavi
June 21, 2026
0

சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் (13.2 மில்லியன்) பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடத்தி வர முயன்ற வெளிநாட்டு பயணி ஒருவர்,...

தேசிய புத்தாக்க விருதுப் போட்டியில் சாதித்த ‘SLIIT Northern Uni’ மாணவர்கள்.!

தேசிய புத்தாக்க விருதுப் போட்டியில் சாதித்த ‘SLIIT Northern Uni’ மாணவர்கள்.!

by Mathavi
June 21, 2026
0

வருடந்தோறும் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குநர்களையும், புத்தாக்கங்களையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் புகழ்பெற்ற தேசிய விருதை, SLIIT Northern Uni தகவல் தொழில்நுட்ப மாணவர்கள் இம்முறை தமதாக்கிக்...

திடீர் சோதனையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள்.!

திடீர் சோதனையில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள்.!

by Mathavi
June 21, 2026
0

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தொடர் திடீர் சோதனை நடவடிக்கையில் 42 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை (19)...

வட இலங்கை சங்கீத சபை நடாத்திய 27ஆவது கலா வித்தகர் பட்டமளிப்பு விழா.!

வட இலங்கை சங்கீத சபை நடாத்திய 27ஆவது கலா வித்தகர் பட்டமளிப்பு விழா.!

by Mathavi
June 21, 2026
0

வட இலங்கை சங்கீத சபை நடாத்திய 27ஆவது கலா வித்தகர் பட்டமளிப்பு விழாவானது நேற்றையதினம் மருதனார்மடத்தில் உள்ள வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் நாடு முழுவதும் 22 ஆயிரம் முறைப்பாடுகள்.!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் நாடு முழுவதும் 22 ஆயிரம் முறைப்பாடுகள்.!

by Mathavi
June 21, 2026
0

இலங்கை முழுவதும் கிட்டத்தட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய 22 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன என்றும், அதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் 6 ஆயிரம் முதல்...

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களை இன்னமும் கூடாரங்களிலேயே தவிக்கவிட்டுள்ளது அரசு.!

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களை இன்னமும் கூடாரங்களிலேயே தவிக்கவிட்டுள்ளது அரசு.!

by Mathavi
June 21, 2026
0

"பாதுகாப்பான காணி இல்லை என்ற காரணத்தைக் கூறி, 'டித்வா' பேரிடரினால் பாதிக்கப்பட்ட மலையக அகதிகளை அநுர அரசு இன்னமும் தற்காலிக கூடாரங்களிலேயே தவிக்கவிட்டுள்ளது. இந்நிலைமை கண்டி, நுவரெலியா...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி