• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 20, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மல்லாவி மத்திய கல்லூரியில் நுண்கலைப்பீடம் திறந்து வைப்பு!

selvan by selvan
June 18, 2026
in இலங்கை செய்திகள்.
0
மல்லாவி மத்திய கல்லூரியில் நுண்கலைப்பீடம் திறந்து வைப்பு!
Share on FacebookShare on Twitter


முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட மல்லாவி மத்திய கல்லூரியில் நுண்கலைப்பீடம் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

இந்த நுண்கலையகமானது பெரும் மதிப்பிற்குரிய மருத்துவக் கலாநிதியும் கொடைவள்ளலுமான விமல் ஜெயரட்ணம் அவர்களின் முழுமையான நிதிப் பங்களிப்புடன், ஜெயரட்ணம் நம்பிக்கை நிதியத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சித்திரம், சங்கீதம், நடனம், நாடகம் ஆகிய நான்கு துறைகளுக்கும் தனித்தனியான வகுப்பறைகளை உள்ளடக்கியதாக இரண்டு மாடிகளைக் கொண்டு இந்த நுண்கலையகம் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி அதிபர் த.தர்மராஜா அவர்களின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழா நிகழ்வில், வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் மற்றும் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

இத்திட்டத்தின் கொடையாளரான மருத்துவக் கலாநிதி விமல் ஜெயரட்ணம் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, தேசியக் கொடி மற்றும் பாடசாலைக் கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. புதிய கட்டடத்தின் பெயர்ப்பலகையை ஆளுநர் அவர்கள் திரைநீக்கம் செய்து வைக்க, கட்டடத்தை மருத்துவக் கலாநிதி விமல் ஜெயரட்ணம் நாடா வெட்டித் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசேட மேடை நிகழ்வில், இப்பாடசாலைக்கு கடந்த காலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளை அமைத்துக் கொடுத்ததுடன், தற்போது இந்த நுண்கலையகத்தையும் நிர்மாணித்துக் கொடுத்த மருத்துவக் கலாநிதி விமல் ஜெயரட்ணம் அவர்களின் மகத்தான சேவையைப் பாராட்டி, அவருக்கு ‘வாழும் வள்ளல்’ விருது வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அத்துடன், தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்து மாணவர்களுக்கு மக்கள் இசையைப் பயிற்றுவித்த பாடகரும் நடிகருமான கருங்குயில் அவர்களால், மருத்துவக் கலாநிதி விமல் ஜெயரட்ணம் அவர்களை வாழ்த்தி உருவாக்கப்பட்ட சிறப்புப் பாடலொன்றும் மாணவர்களால் இதன்போது இசைக்கப்பட்டது.

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள்,

‘ஒரு பாடசாலைக்கு அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் சமூகம் உதவி செய்வதுதான் வழமை. ஆனால், இந்தப் பாடசாலைக்கு விடுதிக் கட்டடங்கள் மற்றும் நுண்கலையகம் என்பவற்றை அமைத்துக் கொடுத்த விமல் ஜெயரட்ணம் அவர்களுக்கும், இந்தப் பாடசாலைக்கும், ஏன் இந்த மாவட்டத்துக்கும் கூட எந்தவிதத் தொடர்பும் இல்லை.

ஆனாலும் அவர் தனது சொந்த வீட்டைக்கூட விற்று இந்த மிகப் பெரிய உதவிகளைச் செய்திருக்கின்றார். பணம் இருப்பவர்களிடத்தில் மனம் இருக்காது, மனம் இருப்பவர்களிடத்தில் பணம் இருக்காது என்று சொல்வார்கள்.

ஆனால், விமல் ஜெயரட்ணம் அவர்களிடம் அவை இரண்டும் நிறைந்திருக்கின்றது. அவரது தியாகத்தைப் பாராட்டுவதற்கு வார்த்தைகளே போதாது.

தனது உரையில் ஒரு விடயத்தைக் குறிப்பிட்ட மருத்துவக் கலாநிதி விமல் ஜெயரட்ணம், இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் யேசுதானந்தன் அவர்களால்தான் தான் இங்கே இவ்வளவு விடயங்களையும் செய்ததாகக் கூறினார்.

அது முற்றிலும் உண்மை. முன்னாள் அதிபர் யேசுதானந்தன் மிகச் சிறப்பான தலைமைத்துவத்தை இந்தப் பாடசாலைக்கு வழங்கியிருந்தார். அவர் அன்று ‘இந்த மேலதிக வேலைகள் எனக்கேன்?’ என்று எண்ணியிருந்தால், இந்தப் பெரிய திட்டங்கள் பாடசாலைக்குக் கிடைத்திருக்காது. அதனால்தான், எல்லாமே ‘தலைமைத்துவத்தில்’ தான் தங்கியிருக்கின்றது என நான் பல தடவைகள் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றேன்.

எமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தினால் வீணான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற எண்ணம் அதிகாரிகளிடத்தில் அதிகரித்து வருகின்றமையால், மக்கள் அடைய வேண்டிய பல நன்மைகள் அவர்களைச் சென்றடைவதில்லை.

எனவே, மாணவர்களாகிய உங்களைச் சிறந்த தலைமைத்துவத்துடனும், ஆளுமையுடனும் வளர்த்துக்கொள்ளுங்கள் என்று நான் வலியுறுத்துகின்றேன்.

வெறும் புத்தகப் புழுக்களாக மாத்திரம் இருந்துவிடாமல், இந்தச் சமூகத்துக்குச் சேவை செய்யக்கூடியவர்களாக உங்களை நீங்களே வளர்த்தெடுக்க வேண்டும்.

சமூகத்துக்கு உதவி செய்பவர்களைத் தான் இந்தச் சமூகம் என்றும் மதிக்கும். எத்தகைய உயர் பதவிகளில் இருந்தாலும், சமூகத்துக்காக உழைக்காவிட்டால் அந்தப் பதவியால் எவ்விதப் பயனும் இல்லை.

இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த நுண்கலையகமும், உங்களைப் படிப்புடன் மாத்திரம் சுருக்கிவிடாது இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் உங்களது ஆற்றல்களை வெளிக்கொணரப் பெரிதும் உதவும், எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், துணுக்காய் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், அயற்பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts

தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு மருத்துவர் தொடர்பில் அர்சுனா எம்பி வெளியிட்ட காணொளிகளை நீக்குமாறு உத்தரவு!

by selvan
June 20, 2026
0

நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மருத்துவர் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு மருத்துவர், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த...

இராணுவ நடவடிக்கையால் மட்டுமே இந்தியா கச்சத்தீவை மீட்க முடியும்!

by selvan
June 20, 2026
0

கச்சத்தீவின் இறையாண்மை என்பது சர்வதேச சட்டம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின்படி ஏற்கனவே தீர்க்கப்பட்ட ஒரு விவகாரம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்...

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

by selvan
June 20, 2026
0

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை...

செம்மணியில் மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்.!

செம்மணியில் குவியலாக காணப்பட்ட எலும்புக்கூடுகள்!

by selvan
June 20, 2026
0

செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றைய தினமும் 03 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுசெம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு...

சர்வதேச வழிகாட்டுதல்களுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம்  செயற்படுகிறது!

சர்வதேச வழிகாட்டுதல்களுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம்  செயற்படுகிறது!

by selvan
June 20, 2026
0

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகக் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழி பகுதியை நீதி...

ஹசீஸ் (Hashish) போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது!

by selvan
June 20, 2026
0

முப்பத்தேழு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் (Hashish) போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்....

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

யாழில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறச் சென்ற இளைஞர் விபத்தில் உயிரிழப்பு!

by selvan
June 20, 2026
0

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி, பாரதி வீதியைச் சேர்ந்த 21 வயதான குறித்த இளைஞன், சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்காக வாகனப்...

சாதாரண தர பரீட்சையில் இம்முறை  11,790 பரீட்சாத்திகள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி

சாதாரண தர பரீட்சையில் இம்முறை  11,790 பரீட்சாத்திகள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி

by selvan
June 20, 2026
0

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா...

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகின!

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகின!

by selvan
June 19, 2026
0

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) வெளியிடப்பட்டுள்ளன.2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது, கடந்த...

இந்த ஆண்டுக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்படும்

by selvan
June 19, 2026
0

நீண்டகாலமாக விவாதத்திற்குரியதாக இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி