• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 15, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பாலச்சந்திரனின் மரணம் பற்றி பேசும் ஹக்கீம் முஸ்லிம் பொலிஸாரின் படுகொலையை மறந்தது ஏன்? – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கேள்வி

selvan by selvan
June 15, 2026
in இலங்கை செய்திகள்.
0
பாலச்சந்திரனின் மரணம் பற்றி பேசும் ஹக்கீம் முஸ்லிம் பொலிஸாரின் படுகொலையை மறந்தது ஏன்? – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கேள்வி
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனின் பாதுகாப்பு மற்றும் உரிமை தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டிருந்தமைக்கு ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

பிரபாகரனின் மகன் குறித்துப் பேசும் ரவூப் ஹக்கீம், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி எல்.ரி.ரி.ஈ அமைப்பால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் பொலிஸ் அதிகாரிகளின் சோக வரலாற்றை மறந்துவிட்டாரா என்று  அக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை முன்வைத்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“எந்தவொரு பிள்ளையும் தனது பெற்றோரின் அரசியல் நிலைப்பாடுகளுக்கோ அல்லது ஆயுதச் செயல்களுக்கோ பொறுப்பாகக் கருதப்படக் கூடாது என்பது சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் அடிப்படை விதியாகும். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், பிரபாகரனின் மகனைப் பற்றி மட்டும் நாடாளுமன்றத்தில் பேசும் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், அவரது நேரடி உத்தரவின் பேரில் யுத்த காலத்தில் துடிதுடிக்கக் கொல்லப்பட்ட ஏனைய ஆயிரக்கணக்கான சாமானிய சிறுவர்கள், பொதுமக்கள் மற்றும் பலவந்தமாகப் போரில் இணைக்கப்பட்ட சிறுவர் போராளிகளின் அவல நிலை குறித்தும் பேச வேண்டும்.

இலங்கையின் ஊடக மற்றும் அரசியல் அரங்குகளில் ‘போட்டி பாதிக்கப்பட்ட நிலை’ என்ற பாகுபாடான சூழ்நிலையே காணப்படுகின்றது.

ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் வலி மற்றும் துயரங்கள் மட்டும் தேசிய மட்டத்தில் தொடர்ச்சியாக நினைவுகூரப்படும் வேளையில், மற்றுமொரு தரப்பான முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றுப் பேரழிவுகள் திட்டமிட்டுக் கடந்து செல்லப்பட்டு மௌனமாக்கப்படுகின்றன. இது சமநீதிக்கு அப்பட்டமான இழுக்காகும்.

கடந்த 1990 ஜூன் 11 அன்று இந்திய அமைதிப்படை நாட்டை விட்டு வெளியேறிய சூழலில், எல்.ரி.ரி.ஈ. அமைப்பின் நிபந்தனைக்கு இணங்க, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலிருந்து 600 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் பொலிஸ் அதிகாரிகள் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்தனர்.

அவ்வாறு பாதுகாப்பை நம்பிச் சரணடைந்த அரச அதிகாரிகளே காடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இது சாதாரண போர்க்கால மரணமல்ல, சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் போர்க்குற்றமாக ஆராயப்பட வேண்டிய கொடூர சம்பவமாகும்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் குடும்பங்கள் கடந்த 36 ஆண்டுகளாக நீதி, உண்மை மற்றும் இழப்பீட்டை எதிர்பார்த்துக் கண்ணீருடன் வாழ்ந்து வருகின்றன. பல குடும்பங்களுக்கு அரசிடமிருந்து இன்னமும் முறையான பதில்களோ அல்லது தகுந்த வாழ்வாதார அங்கீகாரமோ கிடைக்கவில்லை.

எனவே, தற்போதைய அரசு இந்த வரலாற்றுப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் உடனடியாக ஒரு சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணையை முன்னெடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்பதுடன், உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தகுதியான அரச வேலைவாய்ப்புகளை வழங்க அரசு முன்வர வேண்டும்.

அத்துடன், 1990 ஜூன் 11 படுகொலையில் தேசத்துக்காக உயிர்நீத்த முஸ்லிம் பொலிஸ் அதிகாரிகளை நினைவுகூரும் வகையில் தேசிய நினைவுச் சின்னம் ஒன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

வருடாந்தம் இதற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் தேசிய மட்டத்தில் உத்தியோகபூர்வமாக நடத்தப்பட வேண்டும் என்பதுடன், எதிர்காலச் சந்ததியினர் உண்மையை அறிந்துகொள்ளும் பொருட்டு பாடசாலை வரலாற்றுப் பாடப்புத்தகங்களிலும் இந்தச் சம்பவம் உள்ளடக்கப்பட வேண்டும்.

ஒரு பிள்ளையின் உரிமையைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, நாட்டுக்காகப் படுகொலை செய்யப்பட்ட தந்தையரின் நினைவைப் பாதுகாப்பதும் அதே அளவு முக்கியமானது.

நாட்டில் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் சமமான நினைவஞ்சலியும், நீதியும் வழங்கப்படும் போதுதான் இலங்கையில் உண்மையான தேசிய நல்லிணக்கம் உருவாகும்.” – என்றும் கலீலுர் ரஹ்மான் தனது அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts

மட்டக்களப்பு கொம்மாதுறை மேற்கில் மூடப்பட்டுள்ள ஒடியார் வீதியை திறக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

மட்டக்களப்பு கொம்மாதுறை மேற்கில் மூடப்பட்டுள்ள ஒடியார் வீதியை திறக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

by selvan
June 15, 2026
0

மட்டக்களப்பு,ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான, கொம்மாதுறை மேற்கில் மூடப்பட்டுள்ள ஒடியார் வீதியை திறந்து மக்கள் பாவனைக்கு வழங்கவேண்டும் என பிரதேசத்தின் பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இன்று...

செம்மணியில் இன்றும் 10 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் இன்றும் 10 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுப்பு!

by selvan
June 15, 2026
0

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து பச்சிளம் குழந்தை மற்றும் இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 10 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் இன்று (15) முழுமையாக...

பிள்ளையான் மீது CIDயினர் ஐந்து கொ*லைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்!

பிள்ளையான் மீது CIDயினர் ஐந்து கொ*லைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்!

by selvan
June 15, 2026
0

முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக, மட்டக்களப்பு பிராந்தியத்தில் அரங்கேறிய ஐந்து வெவ்வேறான படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான விபரங்களைக் குற்றப்...

கிழக்கு மாகாணத்தில் விசேட டெங்கு கட்டுப்பாட்டுப் பரிசோதனைகள் ஆரம்பம்

by selvan
June 15, 2026
0

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய  இவ்வாரம் விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இதற்கமைய  ஜூன் 15 முதல் 20 வரை மதஸ்தலங்கள்  பொதுச் சந்தைகள்...

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக ஏ.ரி.எம். றாபி நியமனம்

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக ஏ.ரி.எம். றாபி நியமனம்

by selvan
June 15, 2026
0

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம்தர அதிகாரியானஏ.ரி.எம். றாபி நியமிக்கப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று திங்கட்கிழமை (15) இந்த...

அம்பாறையில் பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமம்!

அம்பாறையில் பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமம்!

by selvan
June 15, 2026
0

அம்பாறை மாவட்டத்தில் பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 24 மணி நேர கடமை கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள...

ஜே.வி.பி மற்றும் எல்.ரி.ரி.ஈ யினர் அழித்த சொத்துக்கள் நாட்டின் கடன் தொகையை விட அதிகம் – நாமல் சாடல்!

ஜே.வி.பி மற்றும் எல்.ரி.ரி.ஈ யினர் அழித்த சொத்துக்கள் நாட்டின் கடன் தொகையை விட அதிகம் – நாமல் சாடல்!

by selvan
June 15, 2026
0

இலங்கையின் தற்போதைய ஒட்டுமொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் சுமையை விட இரண்டு மடங்கு அதிகமான பெறுமதியுடைய தேசிய சொத்துக்களை ஜே.வி.பி. மற்றும் எல்.ரி.ரி..ஈ அமைப்புகள் கடந்த...

மயிலிட்டி மக்கள் துயர் களைய துணை நிற்போம் – மக்கள் போராட்டத்தில் ஈ.பி.டி.பி. உறுதி.!

மயிலிட்டி மக்கள் துயர் களைய துணை நிற்போம் – மக்கள் போராட்டத்தில் ஈ.பி.டி.பி. உறுதி.!

by Mathavi
June 15, 2026
0

வாழ்விடங்களை இழந்து கடந்த 36 வருடங்களாக இன்னல்பட்டு வருகின்ற மக்களின் துயர் களைய ஈ.பி.டி.பி. துணையாக நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று...

மயிலத்தமடு, மாதவனை தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு.!

மயிலத்தமடு, மாதவனை தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு.!

by Mathavi
June 15, 2026
0

எமக்கான நிலம் கிடைக்கப்பெறும் வரையில் நாம் தொடர்ந்து போராடுவோம். மகாவலி எம்மைப் பயன்படுத்த முடியாது, நாம் மகாவலிக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. நமக்கு என்று வடக்கு - கிழக்கிலே...

தீப்பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு.!

தீப்பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு.!

by Mathavi
June 15, 2026
0

தீப்பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது. தற்போது நிலவும் வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக தீ...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி