• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 15, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மட்டக்களப்பு கொம்மாதுறை மேற்கில் மூடப்பட்டுள்ள ஒடியார் வீதியை திறக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

selvan by selvan
June 15, 2026
in இலங்கை செய்திகள்.
0
மட்டக்களப்பு கொம்மாதுறை மேற்கில் மூடப்பட்டுள்ள ஒடியார் வீதியை திறக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு,ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான, கொம்மாதுறை மேற்கில் மூடப்பட்டுள்ள ஒடியார் வீதியை திறந்து மக்கள் பாவனைக்கு வழங்கவேண்டும் என பிரதேசத்தின் பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இன்று மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான, கொம்மாதுறை மேற்கில் அமைந்துள்ள ஒடியா வீதி (கிழக்கு பல்கலைக்கழக வீதி) தற்பொழுது கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

இந்த வீதியானது புறம்படி பகுதியிலிருந்து திருகோணமலை பிரதான வீதியை இணைக்கும் ஒரு முக்கிய பாதையாகும்.

சுமார் 65 வருடங்களுக்கும் மேலாகப் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த இந்த வீதிக்கு, கடந்த 1989-ஆம் ஆண்டில்தான் மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன.

எனினும், அதற்கு முன்பிருந்தே மக்கள் இந்த வீதியைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

விவசாய நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகள் (சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலப்பரப்பு) பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள்,கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் விசேட தேவையுடைய பிள்ளைகள் எனப் பல தரப்பினரும் அன்றாடம் பயன் பெற்று வந்தனர்.

வெறும் 150 மீட்டர் தூரத்தைக் கடந்து பிரதான வீதியை அடையக்கூடிய வசதி இருந்தும், தற்பொழுது இந்த வீதி மூடப்பட்டுள்ளதால், மக்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சுற்றிப் பயணிக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், இப்பகுதியானது வடகீழ் பருவக்காற்றுக் கால மழையினால் சுமார் 6 அடிக்கும் மேல் வெள்ளம் தேங்கக்கூடிய ஒரு பகுதியாகும்.

அவ்வாறான ஒரு மோசமான வெள்ளப் பெருக்கின் போது, விசேட தேவையுடைய பிள்ளை ஒன்றைக் காப்பாற்ற முயன்ற முதியவர்கள் இருவர் உயிரிழந்த துயரச் சம்பவமும் இங்கு நிகழ்ந்துள்ளது.

யுத்தக் காலத்தைக் காரணம்காட்டி மூடப்பட்ட இந்த வீதியை மீண்டும் திறக்குமாறு, யுத்தம் முடிவடைந்த பின்னரும் பொதுமக்கள் தரப்பிலிருந்து ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர் மற்றும் பிரதேச சபை ஆகியோருக்குப் பலமுறை கடிதங்கள் மூலம் கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கும் இது தொடர்பான கடிதங்கள் அனுப்பப்பட்டும், இதுவரை எந்தவொரு முறையான பதிலும் வழங்கப்படவில்லை.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள், எழுத்துப்பூர்வமான எந்தவொரு பதிலும் அளிக்காமல், சாக்குப்போக்குகளைக் கூறி இந்த விவகாரத்தைக் காலம்கடத்தி வருகின்றனர்.

கடந்த 1971-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச வர்த்தமானியில், இந்த வீதி பொதுமக்களுக்கானது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் போன்ற பிற பல்கலைக்கழகங்கள், தனிநபர் ஒருவருக்காகக் கூடத் தங்கள் பாதைகளைத் திறந்துவிட்டுள்ள வரலாறுகள் உண்டு.

யாழ்ப்பாணம், பேராதனை போன்ற எந்தவொரு பல்கலைக்கழகமும் பொதுமக்களின் வீதிகளை மூடிய சரித்திரம் இல்லை.

ஆனால், கிழக்கு பல்கலைக்கழகம் மட்டுமே தங்களை ஏமாற்றி, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும், உரிமையையும் கருத்திற்கொண்டு, இந்த வீதியை உடனடியாகத் திறந்து தருமாறு இலங்கை அரசாங்கத்திடமும், மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான உயர் அதிகாரிகளிடமும் இப்பகுதி மக்கள் மிகவும் பணிவுடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Posts

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

by selvan
June 15, 2026
0

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில், "சதித்திட்டம்" என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என உத்தரவிடுமாறு கோரி யோஷித ராஜபக்ஷ...

செம்மணியில் இன்றும் 10 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் இன்றும் 10 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுப்பு!

by selvan
June 15, 2026
0

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து பச்சிளம் குழந்தை மற்றும் இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 10 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் இன்று (15) முழுமையாக...

பிள்ளையான் மீது CIDயினர் ஐந்து கொ*லைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்!

பிள்ளையான் மீது CIDயினர் ஐந்து கொ*லைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்!

by selvan
June 15, 2026
0

முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக, மட்டக்களப்பு பிராந்தியத்தில் அரங்கேறிய ஐந்து வெவ்வேறான படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான விபரங்களைக் குற்றப்...

கிழக்கு மாகாணத்தில் விசேட டெங்கு கட்டுப்பாட்டுப் பரிசோதனைகள் ஆரம்பம்

by selvan
June 15, 2026
0

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய  இவ்வாரம் விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இதற்கமைய  ஜூன் 15 முதல் 20 வரை மதஸ்தலங்கள்  பொதுச் சந்தைகள்...

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக ஏ.ரி.எம். றாபி நியமனம்

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக ஏ.ரி.எம். றாபி நியமனம்

by selvan
June 15, 2026
0

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம்தர அதிகாரியானஏ.ரி.எம். றாபி நியமிக்கப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று திங்கட்கிழமை (15) இந்த...

அம்பாறையில் பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமம்!

அம்பாறையில் பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமம்!

by selvan
June 15, 2026
0

அம்பாறை மாவட்டத்தில் பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 24 மணி நேர கடமை கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள...

பாலச்சந்திரனின் மரணம் பற்றி பேசும் ஹக்கீம் முஸ்லிம் பொலிஸாரின் படுகொலையை மறந்தது ஏன்? – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கேள்வி

பாலச்சந்திரனின் மரணம் பற்றி பேசும் ஹக்கீம் முஸ்லிம் பொலிஸாரின் படுகொலையை மறந்தது ஏன்? – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கேள்வி

by selvan
June 15, 2026
0

நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனின் பாதுகாப்பு மற்றும் உரிமை தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்...

ஜே.வி.பி மற்றும் எல்.ரி.ரி.ஈ யினர் அழித்த சொத்துக்கள் நாட்டின் கடன் தொகையை விட அதிகம் – நாமல் சாடல்!

ஜே.வி.பி மற்றும் எல்.ரி.ரி.ஈ யினர் அழித்த சொத்துக்கள் நாட்டின் கடன் தொகையை விட அதிகம் – நாமல் சாடல்!

by selvan
June 15, 2026
0

இலங்கையின் தற்போதைய ஒட்டுமொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் சுமையை விட இரண்டு மடங்கு அதிகமான பெறுமதியுடைய தேசிய சொத்துக்களை ஜே.வி.பி. மற்றும் எல்.ரி.ரி..ஈ அமைப்புகள் கடந்த...

மயிலிட்டி மக்கள் துயர் களைய துணை நிற்போம் – மக்கள் போராட்டத்தில் ஈ.பி.டி.பி. உறுதி.!

மயிலிட்டி மக்கள் துயர் களைய துணை நிற்போம் – மக்கள் போராட்டத்தில் ஈ.பி.டி.பி. உறுதி.!

by Mathavi
June 15, 2026
0

வாழ்விடங்களை இழந்து கடந்த 36 வருடங்களாக இன்னல்பட்டு வருகின்ற மக்களின் துயர் களைய ஈ.பி.டி.பி. துணையாக நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று...

மயிலத்தமடு, மாதவனை தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு.!

மயிலத்தமடு, மாதவனை தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு.!

by Mathavi
June 15, 2026
0

எமக்கான நிலம் கிடைக்கப்பெறும் வரையில் நாம் தொடர்ந்து போராடுவோம். மகாவலி எம்மைப் பயன்படுத்த முடியாது, நாம் மகாவலிக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. நமக்கு என்று வடக்கு - கிழக்கிலே...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி