உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஜே.வி.பி மற்றும் எல்.ரி.ரி.ஈ யினர் அழித்த சொத்துக்கள் நாட்டின் கடன் தொகையை விட அதிகம் – நாமல் சாடல்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
36 பார்வைகள்

இலங்கையின் தற்போதைய ஒட்டுமொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் சுமையை விட இரண்டு மடங்கு அதிகமான பெறுமதியுடைய தேசிய சொத்துக்களை ஜே.வி.பி. மற்றும் எல்.ரி.ரி..ஈ அமைப்புகள் கடந்த காலங்களில் திட்டமிட்டு அழித்துள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று மாலை அம்பாறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“கடந்த காலங்களில் நாட்டின் பொருளாதாரத்திற்கு மாபெரும் அழிவுகளை ஏற்படுத்தியவர்களே இன்று எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசின் மீது வீண் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

தற்போதைய அரசின் அமைச்சர்கள் ஈஸ்டர் தாக்குதல் குறித்து நாளுக்கு நாள் முரண்பாடான கருத்துக்களைக் கூறித் தங்களது நிர்வாக இயலாமையை மறைக்க முயல்கின்றனர்.

அத்தோடு, இந்தக் கோரத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றில் உதவிய சட்டத்தரணிகள் மற்றும் கடந்த காலத்தில் இது தொடர்பான விசாரணைக் கோப்புகளை மூடிமறைத்தவர்களுக்கே இந்த அரசு இன்று அரச கட்டமைப்புக்குள் உயர் பதவிகளை வழங்கி கௌரவித்துள்ளது.

அரசு தான் வழங்கிய பொய் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் அம்பலமாவதைத் தடுப்பதற்காக, தங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மக்களுக்கு எதிராக அடக்குமுறையைக் கையாளுவதற்குத் தற்போது தயாராகி வருகின்றது.

நாட்டின் தற்போதைய விவசாய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பெரும்போகத்துக்கான உரத்தை விவசாயிகளுக்கு முறையாக வழங்குவதற்கு அரசாங்கத்திடம் எந்தவொரு திட்டமும் இல்லை.

உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, தங்களுக்கு நெருக்கமான ஒருசில பெரும் வர்த்தகர்களின் நலன்களுக்காக வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்களைத் தாராளமாக இறக்குமதி செய்து இந்த அரசு மடிவளர்க்கின்றது. இதனால் நெல், காய்கறி, பழங்கள் மற்றும் கரும்பு விவசாயிகளும், சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களும் கடுமையான கடன் சுமையில் சிக்கித் தங்களது வியாபாரங்களை முழுமையாக மூடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோல், நாட்டை கட்டியெழுப்பப் புதிய நிதியங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகப் நாடாளுமன்றத்துக்கு வெளியே கூறப்பட்டாலும், நாடாளுமன்றக் குழுக்களில் அவ்வாறான நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

அரசாங்கக் கணக்குகளில் உள்ள பொதுமக்களின் பணம் தவறான கணக்குகளுக்குச் செல்வதாகவும் தெரியவருகின்றது. சாதாரண மக்களின் வங்கி வைப்புக்கள் மற்றும் வரிகள் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பும் அதிகாரிகள், அரசுடன் தொடர்புடைய பெரும் வர்த்தகர்களின் கணக்குகளுக்குக் கோடிக்கணக்கான பணம் முறைகேடாகச் செல்லும்போது மௌனம் காக்கின்றனர்.

அதிகப்படியான வரிச்சுமையால் கிராமப்புறக் கடைகள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.

பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசால், தனியார் துறையில்கூட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை.

கிராம மட்டத்திலிருந்து மத வழிபாட்டுத் தலங்களையும் எல்லைக் கிராமங்களையும் பாதுகாத்த சிவில் பாதுகாப்புப் படை இளைஞர்கள், தற்போதைய ஆட்சியாளர்களின் அரசியல் தேவைகளுக்காகக் கொழும்புக்குக் கட்டாய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச ஊதியத்தைக் கொண்டு கொழும்பு போன்ற பெருநகரங்களில் வாழவும் முடியாமல், கிராமத்திலுள்ள தங்களது குடும்பங்களுக்குப் பணம் அனுப்பவும் முடியாமல் அந்த இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.

ஒடுக்கப்பட்ட மற்றும் சாமானிய மக்களுக்காகப் பேசுவதாகக் கூறி ஏழை மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த இந்த அரசு, இன்று சாதாரண மக்களின் துயரங்களை ஏறிட்டும் பாராது, பெரும் வர்த்தகர்களின் முதலாளித்துவ வர்க்கத்தைப் பாதுகாக்கும் ஒரு மினுமினுப்பான ஆட்சியாக மாறியுள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது.!

கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் இருந்து பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் நேற்று…

78 1 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

53 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

36 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

46 0 0