மண்சரிவால் மூடப்பட்ட வீதி.!
கினிகத்தேன பொலிஸ் பிரிவின் தெஹிகஸ்தென கிராம அலுவலர் கோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, எல்லா உடா செல்லும் தெஹிகஸ்தென சாலை முற்றிலுமாக மண் திட்டுகளால் மூடப்பட்டுள்ளது.
எல்ல உடா வரை பேருந்துகள் செல்ல இயலாது என்றும், அவை இடைவழிப் பாதைகளுக்குத் திருப்பி விடப்படுவதாகவும் கினிகத்தேன பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த டித்வா புயலின் போதும் இப்பகுதி நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது சம்பந்தமாக கினிகத்தேன அபகமுவ செயலாளர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு சாரிந்து உள்ள மண் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
வீதியில் உள்ள மண் திட்டுகள் அகற்றிய பின்னர் வழமைபோல் மீண்டும் பேருந்து சேவைகள் இடம்பெறும் என அம்பகமு பிரதேச செயலாளர் கூறினார்.

