உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேசிய, மாகாண ரீதியான போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
52 பார்வைகள்

மட்டக்களப்பு நகரின் புறநகர் பாடசாலையாக இருந்து நகர்ப்புற பாடசாலைகளுக்கு இணையாக தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்களுக்கு நேற்று(03)பாடசாலை சமூகத்தினால் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட புதூர் விக்னேஸ்வரா மகா வித்தியாலத்திலிருந்து தேசிய ரீதியான, மாகாண ரீதியான போட்டிகளில் கலந்துகொண்டு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பாடசாலை தேசிய ரீதியில் மூன்று நிகழ்வுகளிலும், மாகாண ரீதியில் ஒரு நிலையிலும் இடங்களைப் பெற்று, வலயத்தில் சாதனையினை நிலைநாட்டியுள்ளது.

இந்த சாதனை நிலைநாட்டிய மாணவர்கள் மற்றும் அதற்கு வழியேற்படுத்திய பாடசாலை அதிபர் க.நிரஞ்சன், ஆசிரியர்கள் ஊர்வலமாக பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டனர்.

இந்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

தேசிய மட்டத்தில் கல்வி அமைச்சும் டவர் நாடக மன்றமும் இணைந்து வழங்கிய குறுநாடகப் போட்டி தேசிய மட்டத்தில் மூன்றாவது இடம்பெற்றது. அதில் மேலும் நான்கு விருதுகளையும் பெற்றுக்கொண்டது.
இதேபோன்று செல்வன் ம.நிதேஷ் அவர்கள் தேசிய மட்டத்தில் நடைபெற்ற சமூக விஞ்ஞான போட்டியில் முதல் பத்து இடங்களுக்குள் ஏழாவது இடத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் சாதனை புரிந்திருக்கின்றார்.

மார்ட்டின் விக்ரமசிங்க கட்டுரை போட்டியில் மாணவி செல்வி மதுஷாணி அவர்கள், தேசிய மட்டத்தில் ஏழாவது இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். கிழக்கு மாகாண விழிப்புணர்வு நாடக விழாவில் பங்கேற்று, மாகாண மட்டத்தில் இரண்டாவது இடத்தைப் நாடக்குழு பெற்றுள்ளது.

கடந்த வருடம் எங்களுடைய பாடசாலை தேசிய ரீதியில் மூன்று நிகழ்வுகளிலும், மாகாண ரீதியில் ஒரு நிலையிலும் இடங்களைப் பெற்று, வலயத்தில் ஒரு சிறந்த நிலைக்கு வந்திருப்பதாக பாடசாலையின் அதிபர் க.நிரஞ்சன் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

1 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

73 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

77 0 0