உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மஸ்கெலியாவில் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
30 பார்வைகள்

மஸ்கெலியாவில் இன்றைய தினம் சிறப்பு வெசாக் ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2570 வது வைசாத்தி மங்கள்ய வருடத்தை முன்னிட்டு சுமனாராம விகாரையின் பௌத்த மத குரு தப்போவன சுஜீத ஹிமி தலைமையில் இந்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் சுமனாராம விகாரையின் பௌத்த சமய தஹாம் பாடசாலை மாணவர்கள், மற்றும் பௌத்த சமய பக்தர்களும் கலந்து கொண்டனர்

இதன்போது மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பூஜை பொருட்கள் பூஜை தட்டுகள் பௌத்த கொடிகள் மற்றும் பௌத்த நடனங்களுடன் மஸ்கெலியா இரண்டாம் சாலை வழியாக சென்று மீண்டும் பிரதான வீது வழியாக சென்று சுமனாராம விகாரையை சென்றடைந்தனர்.

இதேவேளை, இன்று வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் மஸ்கெலியா ஜக்கிய நலன்புரி வர்த்தக சங்கம் இணைந்து தானசாலயையும் ஒழுங்கமைத்தனர்.

நிகழ்வில் மஸ்கெலியா சுமனாராம விகாரையின் பௌத்த மத குரு மற்றும் மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலய பிரதம குரு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச் செல்வி மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் உப தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் அதன் உறுப்பினர்கள் மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ராஜவீரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது தேசிய கொடி பௌத்த மத கொடி மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் கொடி ஏற்றிய பின் மங்கள விளக்கு ஏற்றப்பட்டு சமய பெரியார்களின் சமயம் சார்ந்த சொற்பொழிவு மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச் செல்வியின் வாழ்துரையுடன் அன்னதான நிகழ்வு ஆரம்பமானது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

40 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

23 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0