உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தங்க முலாம் பூசப்பட்ட பழங்கால புத்தர் சிலையுடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

சுமார் 300 ஆண்டுகள் பழமையான 50 கிலோவுக்கும் அதிக எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட பழங்கால புத்தர் சிலையுடன் முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர் நேற்று (14) கண்டி நகரில் கைது செய்யப்பட்டதாக கண்டி தலைமையகக் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் இருவரும் இந்தப் பழங்கால சிலையைக் கண்டிக்கு எடுத்துச் சென்று, அது தங்கத்தினாலானதா? என்பதை உறுதிப்படுத்த முயற்சித்துள்ளனர்.

அப்போது இது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர்கள் இருவரும் புத்தர் சிலையுடன் கைது செய்யப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சிலை ஏதேனும் ஒரு விகாரையில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்தப் பழங்கால புத்தர் சிலை தொல்பொருள் பெறுமதி வாய்ந்ததா? என்பதை உறுதிப்படுத்துவதற்காக, தொல்பொருள் ஆய்வு அறிக்கையைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0