புத்தளம் – மதுரங்குளி பகுதியில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக, பத்தேயம குளத்தின் அணை உடைந்து பெருக்கெடுத்த வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்ததில் 15 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
நேற்று மாலை 5.30 மணியளவில் பெய்த பலத்த மழை காரணமாக பத்தேயம குளத்தின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்தது. இதனால் நீர் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் குளத்தின் அணைப்பகுதி சுமார் 15 அடி நீளத்திற்கு உடைந்து சேதமடைந்தது.
அணை உடைந்ததைத் தொடர்ந்து குளத்தில் இருந்த நீர் பெருகும் வேகத்துடன் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
குளத்தைச் சூழவுள்ள சுமார் 15 வீடுகள் ஒரு அடிக்கும் மேலான வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் வீடுகளிலிருந்த பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
குளத்து நீரை வெளியேற்றி, உடைந்த அணையைத் தற்காலிகமாகப் புனரமைப்பதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


Related Posts
நன்னீர் இறால் அபிவிருத்தி; ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவு அமுல்.!
இலங்கையின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக இலாபகரமான வணிகத் துறையாக மாற்றியமைக்க, ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் புதிய புரட்சிகரமான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது....
பாரவூர்தியுடன் மோதிய உந்துருளி; ஒருவர் உயிரிழப்பு.!
அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதேனிய - அநுராதபுரம் வீதியில் 36வது மைல்கல் அருகே, உந்துருளி ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச்...
சட்டவிரோதமாக புதையல் தோண்டிய மூவர் கைது.!
குடா ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதில்வெவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், எதில்வெவ பகுதியைச் சேர்ந்த 26...
பட்டிருப்பில் இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு.!
மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு பாலத்துக்கு அருகில் இறுதிப் போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது. இறுதிப்...
ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை கூழாவடி பகுதியில் உள்ள ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செம்மண்ணோடை பாடசாலை வீதியைச் சேர்ந்த 63 வயதுடைய...
கஞ்சாவுடன் ஒருவர் கைது.!
சிலாபம், கரவிட்டாகார பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிகளவான கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவரை மாரவில விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்...
குமுதினி படகில் படு கொ*லை செய்யப்பட்டவர்களின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.!
குமுதினி படகில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் 41ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (15-05-2026) நெடுந்தீவில் அமைந்துள்ள நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது. கடந்த 1985ஆம் ஆண்டு...
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொ*லை.!
அவிசாவளை மற்றும் மாத்தளை ஆகிய இரண்டு பொலிஸ் பிரிவுகளும் நேற்று வியாழக்கிழமை (14) கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, மாத்தளை...
தங்க முலாம் பூசப்பட்ட பழங்கால புத்தர் சிலையுடன் இருவர் கைது.!
சுமார் 300 ஆண்டுகள் பழமையான 50 கிலோவுக்கும் அதிக எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட பழங்கால புத்தர் சிலையுடன் முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர் நேற்று (14)...
ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை.!
ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து...










