இலங்கையில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை, எதிர்வரும் நாட்களில் படிப்படியாகக் குறையும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவிக்கையில்,
“தற்போது நிலவி வரும் வளிமண்டலத் தொகுதியானது மிகவும் மெதுவாக வடக்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. இதன் காரணமாக மழையின் தீவிரமும் வேகமும் வரும் நாட்களில் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.
கனமழை குறைந்தாலும், மேற்கு மற்றும் தென்மேற்கு காற்றுத் தொகுதி காரணமாக மேல், சப்ரகமுவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
மிகக் கடுமையான மழை வீழ்ச்சி படிப்படியாகக் குறைவடைந்து வந்தாலும், வானிலை மாற்றங்கள் மற்றும் மின்னல் தாக்கங்கள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது.” – என்றார்.
Related Posts
பல மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் புவியியலாளர் கைது.!
108 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள 'கொக்கெய்ன்' போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (15) முற்பகல் கட்டுநாயக்க விமான...
மன்னாரை சென்றடைந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி.!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் ஊர்திப் பவனி இன்று வெள்ளிக்கிழமை (15) காலை மன்னாரை சென்றடைந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...
திசைகாட்டி அரசின் கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டுவோம்.!
சட்டத்தையும் நீதியையும் கேலிக்குள்ளாக்கும் திசைகாட்டி அரசின் செயற்பாடுகளை முறியடிக்க, அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து மக்கள் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்...
போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை; ஒரே நாளில் 734 பேர் சிக்கினார்கள்.!
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு பூராகவும் போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட விசேட...
நன்னீர் இறால் அபிவிருத்தி; ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவு அமுல்.!
இலங்கையின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக இலாபகரமான வணிகத் துறையாக மாற்றியமைக்க, ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் புதிய புரட்சிகரமான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது....
பாரவூர்தியுடன் மோதிய உந்துருளி; ஒருவர் உயிரிழப்பு.!
அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதேனிய - அநுராதபுரம் வீதியில் 36வது மைல்கல் அருகே, உந்துருளி ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச்...
சட்டவிரோதமாக புதையல் தோண்டிய மூவர் கைது.!
குடா ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதில்வெவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், எதில்வெவ பகுதியைச் சேர்ந்த 26...
பட்டிருப்பில் இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு.!
மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு பாலத்துக்கு அருகில் இறுதிப் போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது. இறுதிப்...
ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை கூழாவடி பகுதியில் உள்ள ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செம்மண்ணோடை பாடசாலை வீதியைச் சேர்ந்த 63 வயதுடைய...
கஞ்சாவுடன் ஒருவர் கைது.!
சிலாபம், கரவிட்டாகார பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிகளவான கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவரை மாரவில விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்...










