• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 24, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை பெற்றுத்தர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

Mathavi by Mathavi
May 12, 2026
in இலங்கை செய்திகள்., மட்டக்களப்பு செய்திகள்
0
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை பெற்றுத்தர ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை உடனடியாக பெற்றுத்தர ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலைமை மறுக்கப்பட்டால் விவசாயிகளுடன் நாங்களும் இணைந்து வீதியில் இறங்க வேண்டிய நிலையைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையினுடைய தலைவர் சந்திரசேகரன் சந்திரமோகன் தெரிவித்தார்.

தனியார் நிறுவனங்கள் ஊடாக விவசாயிகளுக்கு உரம் விநியோகம் செய்வதற்கு அரசாங்கம் பணத்தினை வழங்கியுள்ள போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை வழங்குவதற்கு இழுத்தடிப்புகளை செய்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

இன்று மட்டு ஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையினுடைய ஊடக சந்திப்பு நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையினுடைய தலைவர் சந்திரசேகரன் சந்திரமோகன்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது சிறுபோகம் விதைக்கப்பட்டு 50 நாட்களைக் கடந்த நிலையில் உள்ளது. 50 நாட்கள் கடந்தும் சில கமலநல சேவைகள் நிலையத்துக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் பசளை விநியோகம் நடைபெறாமல் உள்ளது மிக வருத்தத்தினைத் தருகின்றது.

வாகரை மற்றும் ஏறாவூர் கமலநல சேவைகள் நிலையத்துக்கு தனியார் கம்பெனி மூலம் உர விநியோகம் நடைபெற வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்து அவர்களுக்குரிய பணமும் கமலநல சேவைகள் நிலையத்தினால் கடந்த மாதம் (ஏப்ரல்) வைப்பிலிடப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது.

இன்று வரை ஒவ்வொரு நாளும் நாங்களும் கமலநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் தேசிய உர செயலகம் ஆகியவற்றுடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு நாளும் நாளை வரும் நாளை வரும் என்று விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றார்கள். அதாவது அந்த நிறுவனம் வந்து எங்கள் அதிகாரிகளைக் கூட ஏமாற்றுகின்றது.

நேற்று தனியார் நிறுவனத்துக்கு மூன்று லொறிகள் அனுப்பப்பட்டது. மூன்று லொறிகளில் ஒரு லொறியில் உரம் ஏற்றப்பட்டும், பிற்பகல் அந்த லொறியைத் தடுத்து அந்த லொறியின் சாவியை அந்த உரக் கம்பனி பறித்து உரம் வருவதனைத் தடை செய்துள்ளார்கள். அதன் பிற்பாடு எங்களுக்குத் தகவல் கிடைக்கப்பெற்று, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேசிய உர செயலகம், பிரதி ஆணையாளர் கமலநல அபிவிருத்தி திணைக்களம் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு, அதன் பிற்பாடு ஒரு லொறி மாத்திரம் இரவு விடுவிக்கப்பட்டதாக நாங்கள் அறிகின்றோம்.

இருந்தும் வாகரை மற்றும் ஏறாவூர் கமலநல சேவைகள் நிலையத்துக்கு 327 மெட்ரிக் டன் தர வேண்டிய பசளையில் 40 மெட்ரிக் டன் மாத்திரமே தரப்பட்டுள்ளது. விதைத்து 50 நாட்கள் கடந்த நிலையில், பிறந்த குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய தாய்ப்பால் மறுக்கப்பட்டது போல் அந்தப் பயிர்களுக்கான உரம் மறுக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலைமைகள் ஏற்படும் போது இவ்வாறான கம்பனிகளை தயவு செய்து அரசாங்கம் இழுத்து மூட வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு. விவசாயிகள் ஒவ்வொரு நாளும் கமலநல சேவைகள் நிலையத்துக்குள் குவிந்த வண்ணமாக இருக்கின்றார்கள்.

நாங்கள் நினைக்கின்றோம் இந்த உரக் கம்பனிகள் கமலநல சேவைகள் நிலையத்துக்கான உரங்களைத் தாமதப்படுத்துவதன் மூலம், வெளியில் அவர்களால் 25 கிலோ யூரியா என்று சொல்லப்படுகின்ற கலர் அடிக்கப்பட்ட யூரியாவினை விற்பனை செய்வதற்காக இவ்வாறான சூட்சுமங்களைக் கையாளுகின்றார்களோ என சந்தேகத்தை எழுப்புகின்றது. அரச கூட்டுத்தாபனம் 853 மெட்ரிக் தொன் மாவட்டத்துக்குத் தர வேண்டி இருந்தது, அதில் 697 மெட்ரிக் தொன்னைத் தந்திருக்கின்றார்கள், மீதமுள்ள 156 மெட்ரிக் தொன் தற்போது கிடைக்க வேண்டியுள்ளது. தனியார் கம்பனியில் 2977 மெட்ரிக் தொன் தர வேண்டி இருந்தது. 2047.5 மெட்ரிக் தொன் தற்போது மாவட்டத்துக்கு வந்துள்ளது, இன்னும் 929 மெட்ரிக் தொன் தனியார் கம்பனி மாவட்டத்துக்குத் தர வேண்டி இருக்கின்றது. அதிலும் தனியார் நிறுவனம் தான் ஆகக்கூடுதலாக 287 மெட்ரிக் தொன் இன்னும் தர வேண்டியுள்ளது.

நாங்கள் ஓட வேண்டிய இடத்துக்கெல்லாம் ஓடிவிட்டோம், கதைக்க வேண்டியவர்களிடமெல்லாம் கதைத்துவிட்டோம், ஆனால் தீர்வு வராததால் ஜனாதிபதி 20ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகை தர இருப்பதாக அறிகின்றோம், அவருக்கு இந்தச் செய்தி போக வேண்டும். அவர் விரைவாக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதோடு, வாழைச்சேனை கமலநல சேவைகள் நிலையத்துக்கு இன்னுமொரு நிறுவனத்தால் 4200 பேக் யூரியா தர வேண்டி இருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் விவசாய திணைக்களத்தின் சிபாரிசாக ஏக்கர் ஒன்றுக்கு யூரியா 125 கிலோவும், ரிஎஸ்பி 45 கிலோவும், எம்ஓபி 45 கிலோவுமாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இருந்தும் தற்போது முதலாம் கட்டமாகக் கமலநல சேவைகள் நிலையத்தின் ஊடாக ஏக்கர் ஒன்றுக்கு 30 தொடக்கம் 40-45 கிலோ வரையான யூரியா வழங்கப்படுகின்றது. அது உண்மையில் எமது மாவட்டத்தின் மணல் வளத்தைப் பொறுத்தவரையில் பசளை குறைந்த மண்ணாகக் காணப்படுவதால் அவர்கள் தரும் பசளை போதாமல் உள்ளது. அதனை ஆகக் குறைந்தது ஏக்கர் ஒன்றுக்கு 100 கிலோவாவது தருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் தற்போது விவசாயிகளிடம் இருந்த நெல்லை வந்து தனியார் வியாபாரிகள் 6000 ரூபாய் தொடக்கம் 7000 ரூபாய் வரையான விலையிலேயே கொள்வனவு செய்கின்றார்கள். எங்களது உற்பத்திச் செலவு மிக அதிகமாகக் காணப்படுகின்றது. சிறுபோக அறுவடையைப் பொறுத்தவரையில் எங்களது உரத்துக்கான விலை, டீசல் மற்றும் விதைநெல், களை நாசினி, கிருமிநாசினி என்பன மிக அதிகமான விலையேற்றம் பெற்று காணப்படுகின்றது. அறுவடை செய்தவுடன் ஆகக் குறைந்தது நாட்டு நெல்லுக்கான விலை 150 ரூபாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் எதிர்காலத்தில் விவசாயத்தினை கைவிட வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த சிறுபோகத்தைப் பார்த்துதான் நாங்கள் எதிர்வரும் போகம் இந்த விவசாயத்தைச் செய்வதா இல்லையா என்பதைப் பற்றி தீர்மானிக்க வேண்டும். தயவு செய்து ஜனாதிபதி அவர்களிடம் நேரடியாக நாங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றோம்,

மாவட்டத்துக்கான பசளையினை உடனடியாகப் பெற்றுத்தர வேண்டும் என்பது எமது பணிவான வேண்டுகோள். இந்த நிலைமை மறுக்கப்பட்டால் விவசாயிகளுடன் நாங்களும் இணைந்து வீதியில் இறங்க வேண்டிய நிலையைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்பதையும் தயவாகக் கூறுகின்றோம்.

Related Posts

தேர்தல்களின் போது அழியா மை பயன்படுத்துவதை தவிர்த்தால் சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க முடியும்!

by selvan
June 24, 2026
0

தேர்தல்களின் போது வாக்களித்ததை உறுதிப்படுத்துவதற்காக விரலில் மை பூசும் முறையை நீக்குவதன் மூலம், ஒரு தேர்தலின் போது சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க...

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

by selvan
June 24, 2026
0

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (24) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 113 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன. இதன்படி,...

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணைய வழியில் மட்டுமே பெறலாம்!

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணைய வழியில் மட்டுமே பெறலாம்!

by selvan
June 24, 2026
0

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான சான்றிதழ்கள் இணையவழி முறைமையின் ஊடாக மட்டுமே வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக பரீட்சைகள்...

நடைமுறையில் “க்ளீன் ஶ்ரீலங்கா” திட்டம் –  தலைநகரில் துர்நாற்றம்!

நடைமுறையில் “க்ளீன் ஶ்ரீலங்கா” திட்டம் –  தலைநகரில் துர்நாற்றம்!

by selvan
June 24, 2026
0

"அரசாங்கம் 'க்ளீன் ஸ்ரீலங்கா' என்று நாடெங்கும் விளம்பரம் செய்கிறது. ஆனால், தலைநகர் கொழும்பில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்குப் பயங்கரமான துர்நாற்றம் வீசுகிறது" என நாடாளுமன்ற...

புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!

புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!

by selvan
June 24, 2026
0

2026 ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி...

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரை பதவி நீக்கக் செய்தமை வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம்!

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரை பதவி நீக்கக் செய்தமை வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம்!

by selvan
June 24, 2026
0

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஜி. கிஷோரை பதவியில் இருந்து நீக்கியிருப்பது வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம் என்றும், அது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்...

வவுனியா மாநகர சபையின் முதல்வர்  வடக்கு மாகாண ஆளுநரால் பதவி நீக்கம்!

வவுனியா மாநகர சபையின் முதல்வர்  வடக்கு மாகாண ஆளுநரால் பதவி நீக்கம்!

by selvan
June 24, 2026
0

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...

கோட்டாபயவுக்கு சி.ஐ.டி அழைப்பு.!

கைதைத் தடுக்கக் கோரும் கோட்டாபயவின் ரிட் மனு ஒத்திவைப்பு!

by selvan
June 24, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகளின் பின்னணியில், தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல்...

352 மில்லியன் ரூபா மதிப்புள்ள  ‘ஹஷிஸ்’ போதைப்பொருளுடன்
18 வயதுடைய வெளிநாட்டு யுவதி கைது!

by selvan
June 24, 2026
0

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 352 மில்லியன் ரூபாவுக்கும் அதிக சந்தை மதிப்புடைய சுமார் 36 கிலோ கிராம் ‘ஹஷிஸ்’ போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வர...

தமிழக அமைச்சர் வன்னி அரசை நேரில் சந்தித்தார் சிறீதரன் எம்.பி.!

தமிழக அமைச்சர் வன்னி அரசை நேரில் சந்தித்தார் சிறீதரன் எம்.பி.!

by Mathavi
June 24, 2026
0

தமிழ்நாடு மாநிலத்தின் புதிய சமூக நீதித்துறை அமைச்சரும் நீண்டகால அரசியல் செயற்பாட்டாளருமான வன்னி அரசை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி