நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மக்களுக்கு மிகவும் வினைத்திறனுடன் கொண்டு சேர்ப்பதுடன், வளங்களை முன்னுரிமை அடிப்படையில் சரியாகப் பயன்படுத்துவதை இலக்கு வைத்து மாவட்ட மட்டத்திலான சுகாதார சேவை ஒருங்கிணைப்பை வலுப்படுத்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அவதானம் செலுத்தியுள்ளார்.
இதன்படி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை ‘மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக’ நியமிப்பதற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மத்திய அரசு மற்றும் மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்படும் சுகாதார நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குறைபாடுகளை நீக்கி, மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
புதிய அதிகாரிகளின் பொறுப்புகள் மற்றும் கடமைகள்:
மக்கள் பங்களிப்புடன் மாவட்ட மட்டத்திலான சுகாதாரத் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை முன்னுரிமைப்படுத்துதல்.
அத்தேவைகளை தேசிய மற்றும் மாகாண சுகாதாரத் திட்டங்களுடன் இணைக்க வசதி செய்தல்.
மத்திய மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களுக்கு இடையே வளங்களைச் சரியாகப் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்தல்.
முக்கியமான புதிய திட்டங்களை அடையாளம் கண்டு அமைச்சுக்குப் பரிந்துரைத்தல்.
தற்போது நடைமுறையிலுள்ள திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்து, உரிய காலத்திற்குள் அவற்றை நிறைவு செய்ய உதவுதல்.
நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் விபரம்:
அனுராதபுரம்: சுசந்த குமார நவரத்ன
பதுளை: ரவீந்திர பண்டார
மட்டக்களப்பு: கந்தசாமி பிரபு
கொழும்பு: வைத்தியர் நஜித் இந்திக்க
திகாமடுல்ல (அம்பாறை): எம்.எம். சுகத் ரத்நாயக்க
காலி: வைத்தியர் நிஷாந்த சமரவீர
கம்பஹா: தர்மப்பிரிய விஜேசிங்க
ஹம்பாந்தோட்டை: வைத்தியர் சந்தருவன் மதரசிங்க
யாழ்ப்பாணம்: வைத்தியர் எஸ். ஸ்ரீ பவனந்தராஜா
கேகாலை: ஆர்.எம். சமந்த ரணசிங்க
களுத்துறை: வைத்தியர் நிஹால் அபேசிங்க
கண்டி: தனுர திசாநாயக்க
குருநாகல்: வைத்தியர் ஜகத் குணவர்தன
மாத்தளை: செல்வி. தீப்தி நிரஞ்சனி வசலாகே
மாத்தறை: லால் பிரேமநாத்
மொனராகலை: எச்.எம். சரத் குமார
நுவரெலியா: டி. மஞ்சுள சுரவீரஆராச்சி
பொலன்னறுவை: பத்மசிறி பண்டார
புத்தளம்: கயான் ஜனக்க
இரத்தினபுரி: வைத்தியர் ஜனக சேனாரத்ன
திருகோணமலை: ரொஷான் அக்மீமன
வன்னி: செல்வதம்பி திலகநாதன்
இந்த புதிய பொறிமுறையூடாக சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்தி, மக்களுக்கு நம்பிக்கையான மற்றும் இலகுவான சேவையை வழங்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு எதிர்பார்க்கிறது.










