கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில், நேற்று சனிக்கிழமை (09) சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் சுமார் 05 அடி 06 அங்குலம், குட்டையான தலைமுடி மற்றும் தாடி வளர்த்துள்ளார் எனவும், கருப்பு நிற அரைக்காற்சட்டை மற்றும் பழுப்பு நிறச் சட்டை அணிந்துள்ளதாக பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர் யார் என்பது குறித்த விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கொழும்பு துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related Posts
தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து.!
பெலியத்த தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த - கசாகல இடையிலான பகுதியில் 154 ஆவது மைல்கல்லுக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற வாகன விபத்தில் 10...
புதிய தலைமுறையின் எதிர்பார்ப்பே இந்த வெற்றி.!
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ச.ஜோசப் விஜய்க்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது...
இரு குழுக்களுக்கு இடையே மோதல்; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி.!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் நேற்றிரவு (09) இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி, யாழ்ப்பாணம், அனுராதபுரம், கொழும்பு...
விஜய்க்கு அநுர வாழ்த்துச் செய்தி.!
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ...
சொக்லேட் வடிவில் கடத்தப்பட்ட ‘ஹசீஸ்’ – இளைஞன் ஒருவர் கைது.!
விமான நிலையத்தின் ஊடாகப் பாரியளவிலான 'ஹசீஸ்' போதைப்பொருளைக் கடத்தி வர முயன்ற கொழும்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால்...
மலையகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.!
மலையக மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்கு அறவழியில் எழும் மக்கள் எழுச்சியே நிலையான தீர்வைப் பெற்றுத்தரும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கண்டி மாவட்ட...
தனியார் பேருந்து உரிமையாளருக்கு தண்டப்பணம் விதிப்பு.!
மன்னார் - முள்ளிக்குளம் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்று முன்னறிவித்தல் இன்றி சேவையில் ஈடுபடாமை மற்றும் பயணிகளுடன் குறித்த பேருந்தின் நடத்துனர் முரண்பட்டமை ஆகிய...
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது.!
நீண்ட காலமாக சூட்சுமமாக கடல் மற்றும் தரை வழியாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் இன்று (10) இடம்பெற்ற விபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதியுடன் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர சந்திப்பு.!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதி மரியா காஸ்டிலோ பெர்னாண்டஸ், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு...










