பெலியத்த தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த – கசாகல இடையிலான பகுதியில் 154 ஆவது மைல்கல்லுக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காகத் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாணந்துறை பகுதியிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் குழுவினர் பயணித்த கார் ஒன்று, முன்னால் சென்ற லொறியின் பின்பகுதியில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோதிய வேகத்தில் குறித்த லொறியும் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. காரில் பயணித்த மின்சார சபை ஊழியர்களே இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அதிவேக வீதிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Posts
யாழ் மாவட்ட கல்வியை சிதைப்பதற்கு தீவிர முயற்சி – ஆளுநரும் உடந்தை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு.!
யாழ் மாவட்ட கல்வியை சிதைப்பது மட்டுமல்லாது வட மாகாண கல்வியை முழுமையாக சிதைக்கும் நிகழ்ச்சி நிரலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு...
புதிய தலைமுறையின் எதிர்பார்ப்பே இந்த வெற்றி.!
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ச.ஜோசப் விஜய்க்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது...
ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!
கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில், நேற்று சனிக்கிழமை (09) சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் சுமார் 05 அடி 06 அங்குலம், குட்டையான தலைமுடி மற்றும் தாடி...
இரு குழுக்களுக்கு இடையே மோதல்; நால்வர் வைத்தியசாலையில் அனுமதி.!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் நேற்றிரவு (09) இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி, யாழ்ப்பாணம், அனுராதபுரம், கொழும்பு...
விஜய்க்கு அநுர வாழ்த்துச் செய்தி.!
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ...
சொக்லேட் வடிவில் கடத்தப்பட்ட ‘ஹசீஸ்’ – இளைஞன் ஒருவர் கைது.!
விமான நிலையத்தின் ஊடாகப் பாரியளவிலான 'ஹசீஸ்' போதைப்பொருளைக் கடத்தி வர முயன்ற கொழும்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால்...
மலையகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.!
மலையக மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்கு அறவழியில் எழும் மக்கள் எழுச்சியே நிலையான தீர்வைப் பெற்றுத்தரும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கண்டி மாவட்ட...
தனியார் பேருந்து உரிமையாளருக்கு தண்டப்பணம் விதிப்பு.!
மன்னார் - முள்ளிக்குளம் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்று முன்னறிவித்தல் இன்றி சேவையில் ஈடுபடாமை மற்றும் பயணிகளுடன் குறித்த பேருந்தின் நடத்துனர் முரண்பட்டமை ஆகிய...
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது.!
நீண்ட காலமாக சூட்சுமமாக கடல் மற்றும் தரை வழியாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் இன்று (10) இடம்பெற்ற விபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....










