கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் நேற்றிரவு (09) இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி, யாழ்ப்பாணம், அனுராதபுரம், கொழும்பு ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இரண்டு வாகனங்கள், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, வாள், கத்திகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக படுகாயமடைந்த ஒருவர் கொழும்பு வைத்தியசாலைக்கும், மற்றையவர் அனுராதாபுரம் வைத்தியசாலைக்கும் மற்றும் ஒருவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளதுடன் காயமடைந்த ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கப் ரக வாகனத்தில் சென்ற குழு ஒன்றை மற்றுமொரு கப் வாகனத்தில் சென்ற குழுவினர் மோதி வாகனத்தை விபத்துக்குள்ளாக்கியுள்ளதுடன் விபத்துக்குள்ளான வாகனத்தில் பயணித்த நான்கு பேர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ள இதேவேளை சம்பவம் இடம்பெற்ற இடத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, வாள்கள், கத்தி என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்குள்ளான வாகனம் மற்றும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கப் வாகனம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மாவட்ட விசேட குற்றத்த தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














