உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மலையகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
32 பார்வைகள்

மலையக மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்கு அறவழியில் எழும் மக்கள் எழுச்சியே நிலையான தீர்வைப் பெற்றுத்தரும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கண்டி மாவட்ட காணி உரிமைக்கான தலைவருமான எம்.வேலுகுமார் தெரிவித்தார்.

வெறும் அரசியல் மேடைப் பேச்சுகளால் மட்டும் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்று சுட்டிக்காட்டிய அவர், காணி உரிமைக்கான தெளிவான தீர்வுப் பொறிமுறையை மக்கள் மயப்படுத்த வேண்டிய தருணம் இதுவென்றும் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“காணி உரிமை பற்றிப் பேசுவது வரவேற்கத்தக்கது. ஆனால், இன்னும் எத்தனை காலம்தான் பேசிக்கொண்டே இருக்கப் போகின்றோம்? இப்போது பேசுவதற்கான நேரமல்ல, திட்டமிட்ட பொறிமுறையின் ஊடாக தீர்வைப் பெறுவதற்கான காலம்.

நாடாளுமன்றத்திலுள்ள மலையகப் பிரதிநிதிகள் தற்போதைய ‘ட்ரென்ட்’ அரசியலைப் பின் தொடர்வதைத் தவிர்த்து, மக்களின் உண்மையான விடுதலைக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

மலையகத்தின் எதிர்காலச் சந்ததியினருக்கு முறையான காணி உரிமையையும், கௌரவமான வாழ்வையும் பெற்றுக்கொடுக்க இளைஞர்களும், சிவில் அமைப்புகளும் அரசியல்வாதிகளுக்குத் தகுந்த அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

ஜனநாயக ரீதியான அறவழி எழுச்சி ஒன்றே நம் முன்னே இருக்கும் தடைகளைத் தகர்க்கும். மக்களின் இந்த எழுச்சியே மூடியிருக்கும் விடுதலையின் கதவுகளைத் திறக்கும் சாவியாக அமையும்.” – என்றார்.

மலையகப் பகுதிகளில் காணி உரிமை தொடர்பான கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் சூழலில், வேலுகுமாரின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0