உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மே தினக் கூட்டத்தில் பங்கேற்காத மீனவர்களுக்கு ரூபா 3,000 அபராதம் ; பருத்தித்துறையில் சர்ச்சை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
41 பார்வைகள்

கடந்த மே முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தொழிலாளர் தின (மே தினம்) நிகழ்வில் கலந்துகொள்ளாத மீனவர்களுக்குத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமை பருத்தித்துறை மீனவர் சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகர் கடல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களை, தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பருத்தித்துறை கொட்டடி மீனவர் சங்கம் அறிவுறுத்தியிருந்தது.

சங்கத்தின் அறிவுறுத்தலை மீறி, குறித்த மே தினக் கூட்டத்தில் சுமார் 60 மீனவ சங்க உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூட்டத்திற்குச் செல்லாத உறுப்பினர்களுக்கு தலா 3,000ரூபா தண்டப்பணம் (அபராதம்) செலுத்துமாறு மீனவர் சங்கம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் பருத்தித்துறை மீனவர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மீனவ சமூகத்தினர் மற்றும் சமூக நலன் விரும்பிகள் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டுகள் வருமாறு

 கடல் தொழிலாளர் சங்கங்களை ஓர் அரசியல் கட்சியின் தேவைக்காகப் பயன்படுத்துவது மற்றும் உறுப்பினர்களைக் கட்டாயப்படுத்தி அரசியல் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வது ஜனநாயகத்திற்கு முரணானது.

மக்களின் விசனம்: தற்போதைய பொருளாதாரச் சூழலில், அன்றாட வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மீனவர்கள் மீது இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதிப்பது அநீதியானது என ஆளும் தரப்பினர் மற்றும் சங்கத்தினர் மீது பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

அரசியல் மயமாக்கல்: சுயாதீனமாக இயங்க வேண்டிய கடல் தொழிலாளர் சங்கங்களை தேசிய மக்கள் மயப்படுத்தும் முயற்சியாகவே இவ்வாறான செயற்பாடுகள் அமைந்திருப்பதாகச் சமூக நலன் விரும்பிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவம் பருத்தித்துறை மீனவக் கிராமங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளதுடன், கட்டாய அரசியல் பங்கேற்பு குறித்த விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை கொட்டடி மீனவர்கள் சங்க செயலாளரிடம் வினவிய போது அவர் குறிப்பிடுகையில் 

தமது சங்கத்தின் கடந்த ஆண்டு பொதுக்கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி தமது சங்கத்திற்கு கூட்டங்களுக்கு வறுமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டால் அக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத பட்சத்தில் அவர்களுக்கு 3000 தண்டப்பணம் அறவிடப்படும்  அதன் அடிப்படையில் தான் இவ் தண்டம் அளவிடப்பட்டது என தெரிவித்துள்ளார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0