உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

லஞ்ச் சீட் பயன்படுத்திய உணவகத்திற்கு அபராதம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
32 பார்வைகள்

பருத்தித்துறை நகரசபையின் தடையை மீறி உணவுப் பொதியிடலுக்கு ‘லஞ்ச் சீட்’ பயன்படுத்திய மற்றும் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகத்திற்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில், வீடொன்றில் அனுமதியின்றி உணவு கையாளும் நிலையம் இயங்குவதாகவும், அங்கு சட்டவிரோதமாக லஞ்சீட் பயன்படுத்தப்படுவதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஸுக்கு முறைப்பாடுகள் கிடைத்தன. இதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சோதனையின் போது பின்வரும் சட்டவிரோதச் செயல்கள் உறுதி செய்யப்பட்டன.

  • நகர சபையின் அனுமதி மற்றும் உணவு வளவுப்பதிவு சான்றிதழ் இன்றி இயங்கியமை.
  • உணவு பொதியிடலுக்கு தடைசெய்யப்பட்ட ‘லஞ்ச் சீட்’ பயன்படுத்தியமை.
  • உணவுத் தயாரிப்புக்குப் பயன்படும் நீர் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தத் தவறியமை.
  • பணியாளர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் இல்லாமை மற்றும் தனிநபர் சுகாதாரம் பேணப்படாமை.
  • சுற்றுச்சூழலை பாதிப்புக்குள்ளாகக்கூடிய பாதுகாப்பற்ற சூழலில் உணவு உற்பத்தி செய்தமை.

இது தொடர்பாக பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஸினால் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசாரணையின் போது, உரிமையாளர் தனது குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, அவருக்குக் கடும் எச்சரிக்கை விடுத்த நீதிவான், ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

பருத்தித்துறை நகரசபை எல்லைக்குள் கடந்த 01.01.2026 முதல் உணவகங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் வீடுகளில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் லஞ்ச் சீட் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர சபை மீண்டும் எச்சரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

59 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

57 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

57 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

44 0 0