பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில், ராஜாங்கனை சத்தாரத்ன தேரர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு எதிராக, சமூக ஊடகங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாகக் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் முன்னெடுத்த விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து, இந்த விசேட கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தேரரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Related Posts
செம்மணி அகழ்வு; மயான எரிதகன மேடையை உடைத்து மனித என்புகளை மீட்க நடவடிக்கை.!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, சித்துப்பாத்தி இந்து மயான எரிதகன மேடையின் அத்திவாரத்துக்கு அடியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத்...
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு பிராந்திய பணிப்பாளர் திடீர் விஜயம்.!
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்துவது மற்றும் அபிவிருத்திப் பணிகள் குறித்த களஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி.!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச்செயலாளருமான டோ...
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதிக்கு இலங்கை ஜனாதிபதியால் மகத்தான வரவேற்பு.!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச்செயலாளருமான டோ...
இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; தரைமட்டமான பேருந்து தரிப்பிடம்.!
புத்தளம், மதுரங்குளி நகரில் இன்று காலை இடம்பெற்ற பாரிய விபத்தில் கொள்கலன் லொறியின் சாரதி படுகாயமடைந்ததுடன், பொதுச் சொத்துக்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. மதுரங்குளி நகரின் பிரதான...
காணி தொடர்பான பல்வேறு சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தல்.!
காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை(8) காலை நடைபெற்றது. மன்னார்...
சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் வடபுல மாணவர்களை இணைக்கும் Study In யாழ்ப்பாண கல்வி நிறுவனம் திறப்பு.!
வடபகுதி மாணவர்களின் சர்வதேச உயர்கல்விக் கனவை நனவாக்கும் நோக்குடன், சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் அவர்களை நேரடியாக இணைக்கும் Study In யாழ்ப்பாணம் கல்வி நிறுவனத்தின் பிரமாண்ட திறப்பு விழா...
மட்டக்களப்பில் மீட்கப்பட்ட இரு ஆண்களின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னஉப்போடை களப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. சின்னஉப்போடையில் உள்ள களப்பின் பாலத்திற்கு அருகில் இந்த சடலங்கள் நேற்று மாலை...
இங்கு சிங்கள மக்கள் வீதியில் இறங்கினால் எவரும் தப்ப முடியாது.!
இனவாதத்தைத் தூண்டி நாட்டைப் பிளவுபடுத்த எத்தனித்தால், சிங்கள மக்கள் அதற்குப் பாடம் புகட்டுவார்கள் என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்....
பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்.!
பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் சந்தை நிர்வாகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) காலை 10:30 மணியளவில்...










