வியட்நாம் ஜனாதிபதி மே மாதம் 07 ஆம் திகதி நாட்டிற்கு!
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் அவர்கள் மே 7 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
மே 8 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கும் திட்டமிட்டுள்ளார்.
இந்த உயர் மட்ட இராஜதந்திரப் பயணம், இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே ஏற்கனவே உள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி, பல புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.