உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஆபத்தான உந்துருளி சாகசம்; இளைஞர்கள் சுற்றிவளைத்து கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

மாலபே, சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு அருகில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உந்துருளி சாகசங்களில் ஈடுபட்ட 22 இளைஞர்கள் கடுவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதியைப் பயன்படுத்துவோருக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உந்துருளி சாகசங்கள் நடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் நேற்று நடத்திய விசேட சோதனையின் போது இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இளைஞர்கள் ‘வட்ஸ்அப்’ குழு ஒன்றின் ஊடாக ஒருங்கிணைந்து இந்தச் சாகச நிகழ்வைத் திட்டமிட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாகசங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பல உந்துருளிகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதில் பதிவு செய்யப்படாத இரண்டு வாகனங்களும் அடங்கும்.

கைது செய்யப்பட்ட 22 இளைஞர்களும் கடுவலைப் பிரதேசத்துக்கு வெளியே வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் அனைவரும் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

39 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0