உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஒக்ரோபர் 10 -18 வரை ரொரண்டோவில் “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் மாநாடு”

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
42 பார்வைகள்

“செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” எனும் கருப்பொருளில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு ஒன்று எதிர்வரும் ஒக்ரோபர் 10 ஆம் திகமுதல் 18 ஆம் திகதி வரை கனடா ரொரண்டோ மாநகரில் நடைபெற உள்ளதாக குறித்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இம்மாநாடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், பேராசிரியர்களான  முனைவர் அ சண்முகதாசு. முனைவர்கி விசாகரூபன். முனைவர் போல் ரொகான் 

திருமதி விஜிதா திவாகரன் யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த மாநாடு, உலகம் முழுவதுமுள்ள அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்துச் செம்மொழித் தமிழ், செய்யறிவு, மெய்ப் பொருளியல், பண்பாடு, புலம்பெயர் வாழ்வு, உலகமயமாதல், வரலாறு, பொருண்மிய மேம்பாடு ஆகிய துறைகளின் இணையிசைவுகளை ஆராய்வதற்கான அறிவியற் தளமாக அமையவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், தமிழ் அறிவியல் மரபுகளின் வரலாற்று ஆழத்தையும் இன்றைய உலகில் அவற்றின் சமகாலப் பொருத்தத்தையும் வெளிப்படுத்தும் பல்துறை உரையாடல்களை ஊக்குவிப்பதே இம்மாநாட்டின் நோக்கமாகும் என்றும் குறித்த ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய  – தமிழும் செய்யறிவும், மெய்ப்பொருளியலும் பண்பாடும், 

பொருளியல் சிந்தனையும் வாழ்வியலும், தமிழர் வரலாறும் வாழ்வியலும், வடகிழக்குப் பொருண்மிய மேம்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வுகளை கோரியுள்ளதுடன் அவை தமிழ் அல்லது ஆங்கிலம் மொழியில் அமையலாம் என்று தெரிவித்திருந்தனர்.

அத்துடன் குறித்த ஆய்வுச் சுருக்கம் 250-300 சொற்களில் அமைதல் வேண்டும் என்றும் அதைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 2026.05.25 என்றும் தெரிவித்திருந்தனர்.

மேலும் அளிக்கப்படும் அனைத்து ஆய்வுச் சுருக்கங்களும் மாநாட்டு ஆய்வுக் குழுவினரால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு,  இந்த ஆய்வின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் ஆய்வுச் சுருக்கங்களை எழுதியோர் ஆய்வுக் கட்டுரை எழுதுமாறு வேண்டப்படுவர்.

அனைத்து ஆய்வாளர்களுக்கும் அவரவர் ஆய்வுச் சுருக்கத் தேர்வு பற்றிய முடிவு 2026.06.30 ஆம் நாளுக்குள் அறிவிக்கப்படும்.

முழுமையான ஆய்வுக் கட்டுரைகள் 3000 சொற்களுக்கு மிகாமலும் ஒருங்குறி எழுத்துரு 12 அளவிலும் அமைதல் வேண்டும். இக்கட்டுரைகளை 2026.08.31 ஆம் நாளுக்கு முன் கிடைக்கக் கூடியதாக மேற்குறிப்பிட்ட இணைய தளத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்திருந்ததுடன் 

தெரிவு செய்யப்படும் இலங்கை மற்றும் இந்தியக் கட்டுரையாளர்களுக்குக் கனடா சென்று வருவதற்கான வான்வழிச் செலவுச் சீட்டும் கனடாவில் தங்குமிட வசதிகளும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் மாநாடு பற்றிய கூடுதல் விளக்கங்களை www.GlobalTamilConference.org என்னும் இணைய தளத்தில் பார்வையிட முடியும் என்றும்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

2 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

46 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

26 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0