உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நோபல் அமைதிப் பரிசை ட்ரம்பிடம் ஒப்படைத்த மச்சாடோ.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
40 பார்வைகள்

வெனிசூலா எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோ (María Corina Machado), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், தனது நோபல் அமைதிப் பரிசுப் பதக்கத்தை அவருக்குப் பரிசாக வழங்கியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தத் தனிப்பட்ட சந்திப்பின் போது, மச்சாடோ தனது நோபல் பதக்கத்தை ட்ரம்ப்பிடம் ஒப்படைத்தார். இதனை “பரஸ்பர மரியாதையின் ஒரு சிறந்த அடையாளம்” என ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

வெனிசூலாவின் சுதந்திரத்திற்காக ட்ரம்ப் காட்டும் அர்ப்பணிப்பிற்கான அங்கீகாரமாக இப்பரிசு வழங்கப்படுவதாக மச்சாடோ குறிப்பிட்டுள்ளார்.ஒருவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ முடியாது என நோபல் குழு தெளிவுபடுத்தியுள்ளது. “ஒரு பதக்கம் அதன் உரிமையாளரை மாற்றிக்கொள்ளலாம், ஆனால் நோபல் பரிசு பெற்றவர் என்ற பட்டம் மாறாது” என்று நோபல் அமைதி மையம் தெரிவித்துள்ளது.

வெனிசூலா வின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இருப்பினும், மெச்சாடோவை வெனிசூலாவின் புதிய தலைவராக அங்கீகரிக்க ட்ரம்ப் மறுத்து வருகிறார்.

தற்போது இடைக்காலத் தலைவராகச் செயற்படும் டெல்சி ரோட்ரிக்ஸுடன் (Delcy Rodríguez) ட்ரம்ப் நிர்வாகம் இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணி வருகிறது.வெனிசூலாவின் எண்ணெய் துறை மீதான தடைகளை நீக்கி, அதனை மறுசீரமைக்கும் பணிகளில் ட்ரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 500 மில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் விற்பனையை அமெரிக்கா அண்மையில் நிறைவு செய்துள்ளது.

வெனிசூலாவில் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தத் தனது கூட்டணிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மெச்சாடோ ட்ரம்ப்பிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அமெரிக்காவிற்கும் வெனிசூலா விற்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவை சுட்டிக்காட்டிய அவர், “நாம் ஜனாதிபதி ட்ரம்ப்பை நம்பலாம்” எனத் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.அதேவேளை, வெனிசூலாவின் தற்போதைய பதில் தலைவரான டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவுடனான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்குத் தான் தயாராக இருப்பதாகவும், வாஷிங்டனுக்குத் தலை நிமிர்ந்து விஜயம் செய்யத் தயங்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

38 0 0