2006
திருகோணமலை, சம்பூரில் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2006
இலங்கையில் பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தன.
1810
கிராண்ட் போர்ட் சமரில் அரச கடற்படைக் கப்பல்கள் பிரான்சிடம் சரணடைந்தன.
1833
ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் மன்னர் அடிமை ஒழிப்புச் சட்டம் 1833 ஐ அங்கீகரித்தார். ஆனாலும், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்திய அடிமை ஒழிப்புச் சட்டம் 1843 அமுலுக்கு வரும் வரை அடிமை முறை சட்டபூர்வமாக இருந்தது.
1844
பிரெட்ரிக் எங்கெல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் பாரிசில் சந்தித்தனர்.
1845
சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது.
1849
ஒரு மாதகால முற்றுகையின் பின்னர் வெனிசு ஆஸ்திரியாவிடம் வீழ்ந்தது.
1859
சூரியப் புயல் பூமியைத் தாக்கிய அதிதீவிர புவிக்காந்தப் புயல் ஆகும். அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் தொலைத்தந்திச் சேவைகள் பாதிப்படைந்தன.
1867
ஐக்கிய அமெரிக்கா ஆளில்லா மிட்வே தீவுகளைக் கைப்பற்றியது.
1867
நாகை மாவட்டத்தில் அமைந்திருந்த சூளாமணி புத்த விகாரத்தை இடிக்க ஆங்கிலேய அரசு உத்தரவிட்டது
1879
சூலுக்களின் கடைசி மன்னன் செட்சுவாயோ பிரித்தானியர்களினால் சிறைப்பிடிக்கப்பட்டான்.
1898
காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்.
1913
நெதர்லாந்தின் அரசி வில்கெல்மினா டென் ஹாக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார்.
1914
முதலாம் உலகப் போர்: அரச கடற்படை ஜேர்மனியக் கப்பல்களை எலிகோலாந்து பெருங்குடாப் போரில் தோற்கடித்தன.
1914
முதலாம் உலகப் போர்: ஜேர்மனியப் படைகள் பெல்சியத்தில் நாமூர் நகரைக் கைப்பற்றின.
1916
முதலாம் உலகப் போர்: ஜேர்மனி உருமேனியா மீதும், இத்தாலி ஜேர்மனி மீது போரை ஆரம்பித்தன.
1924
சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜோர்ஜியர்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1943
இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக டென்மார்க்கில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது. அடுத்த நாள் அங்கு இராணுவச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
1944
இரண்டாம் உலகப் போர்: மர்சேய், துலோன் ஆகியன விடுவிக்கப்பட்டன.
1963
மார்ட்டின் லூதர் கிங், என் கனவு யாதெனில்… என்ற புகழ்பெற்ற வார்த்தைகளுடன் சொற்பொழிவாற்றினார்.
1964
ஐக்கிய அமெரிக்கா, பிலடெல்பியாவில் இனக்கலவரம் ஆரம்பமானது.
1968
சிகாகோவில் ஜனநாயகவாதிகளின் தேசிய மாநாட்டின் போது கலவரம் வெடித்தது.
1988
ஜேர்மனியில் வான வேடிக்கை விழா ஒன்றின் போது மூன்று விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பார்வையாளர்கள் மீது வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டு 346 பேர் படுகாயமடைந்தனர்.
1990
குவைத்தைத் தனது புதிய மாகாணமாக ஈராக் அறிவித்தது.
1990
சுழல் காற்று அமெரிக்காவின் இலினொய் மாநில நகரங்களைத் தாக்கியதில் 29 உயிரிழந்தனர்.
1993
கலிலியோ விண்கலம் டாக்டில் என்று பின்னர் பெயரிடப்பட்ட சந்திரன் ஒன்றைக் கண்டுபிடித்தது.
1996
வேல்ஸ் இளவரசர் சார்லசு, இளவரசி டயானா மணமுறிவு ஏற்பட்டது.
1998
பாகிஸ்தானின் நாடாளுமன்றம் “திருக்குர்ஆன், நபிவழி” ஆகியவை “அதியுயர் சட்டம்” என அறிவித்தது. இச்சட்டமூலத்தை பாக்கித்தான் மேலவை நிராகரித்தது.
1998
இரண்டாவது காங்கோ போர்: காங்கோ இராணுவம் அங்கோலா, சிம்பாப்வே படைகளின் உதவியுடன், கின்சாசா மீதான ருவாண்டாவின் தாக்குதலை முறியடித்தது.
2011
ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்டோரைத் தூக்கிலிடக்கூடாது எனக் கோரி காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற 21 வயது பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
















