மத்திய மாகாண வர்த்தகம், வணிகம் மற்றும் சுற்றுலாத் துறை, பிரிவு நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள நல்லதன்னியில் உள்ள 96 சுற்றுலா சேவை வழங்குநர்களுக்கும், சுற்றுலா போக்குவரத்து வசதியாளர்கள் ,ஹோட்டல் உரிமையாளர்கள், உதவியாளர்கள், சுற்றுலா தயாரிப்பாளர்கள், உள்ளூர் வழிகாட்டிகள் 5 நாள் அடிப்படைப் பயிற்சியை கடந்த 2024/08/11 முதல் 2024/08/15 வரை வழங்கியது.
இப் பயிற்சி பட்டறை நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள வைட் எலிபண்ட் விருந்தினர் விடுதி கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சுற்றுலா வசதி வழங்குநர் உரிமங்கள் வழங்கப்படும் என்று பயிற்சி பட்டறை நடத்திய மத்திய மாகாண சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்தார்.
பல்வேறு பாடப் பிரிவுகளில் விளக்கம் தந்து மேலும் நடைமுறை அறிவை வழங்கும் பல நிபுணத்துவ பயிற்சியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களால் இந்தப் பயிற்சிப் பட்டறை நடத்த பட்டது.இந்தப் பயிற்சிப் பட்டறைகள் மூலம் அடைய வேண்டிய நோக்கங்கள் சுற்றுலாத்துறையில் ஈடு படுபவர்களுக்கு தேவையான அறிவை வழங்குதல், மனப்பான்மையை வளர்த்தல், சட்டச் சூழலை உருவாக்குதல், அவர்களின் சுற்றுலா வணிகங்களை முறைபடுத்துதல் மற்றும் இந்த நபர்களை ஒழுங்குபடுத்துதல் ஆகும்.










