வலுவிழந்தோருக்கான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் (09) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
வலுவிழந்தோருக்கான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக பிரித்தானியா அறம் Intiative அமைப்பினருக்கும், புதிய வாழ்வு நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்தது.
புதிய வாழ்வு நிறுவனத்தின் இணைப்பாளர் சு.விஜயலாதன் தலைமையில் ஆரம்பமான அறம் Intiative அமைப்பினர், புதிய வாழ்வு நிறுவனத்தினருக்குமான கலந்துரையாடலில் புதிய வாழ்வு நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும், அங்கிருக்கின்ற வலுவிழப்புக்கு உள்ளான நபர்களுடைய உடல், உள நலன் தொடர்பாகவும், வலுவிழந்தோர்களுக்கு தாெழில்நுட்ப ரீதியாக எவ்வாறான தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும் என்பது தாெடர்பாகவும், இளைஞர்களுக்கான தாெழில் வாய்ப்பு தாெடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் புதிய வாழ்வு நிறுவனத்தின் தலைவர் சு.துஸ்யந்தன், உப தலைவர் ப.தர்சினி, உப செயலாளர் செ.கருணாகரன், இயக்குனர் சபை உறுப்பினர்கள், நிர்வாக உறுப்பினர்கள், பிரித்தானியா அறம் Intiative அமைப்பினர், வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் உபதலைவர் உள்ளிட்ட நிர்வாக குழுவினர், மற்றும் சமூக நலன்விரும்பிகள், மாற்றுத்திறனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
















