வவுனியா – பண்டாரிக்குளத்தில் உள்ள வீடு ஒன்றில் தீப்பற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (30.06) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் சாமி அறையில் விளக்கு ஏற்றுவதற்காக தேங்காய் எண்ணெயினை பயன்படுத்துவதற்கு பதிலாக தவறுதலாக பெற்றோலினை பயன்படுத்தியமையாலேயே குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மேலும், குறித்த வீட்டார் இது தொடர்பாக வவுனியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவுக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பகுதியினர் பொதுமக்களின் உதவியுடன் தீயினைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை, பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கருதி சாமி அறைக்குள் வைக்கப்பட்டிருந்த பெற்றோலையே மாறி தேங்காய் எண்ணெய் என நினைத்து பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Related Posts
இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராகவும் அதன் உறுப்பினராகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன்,...
இவ்வாண்டிற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் – ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப்பிரிவில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின்மூலம் முன்னெடுக்கப்படவுள்ள சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வுகள்...
வவுனியா நெடுங்கேணியில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் ரவிகரன் எம்பி
வவுனியா வடக்கு - நெடுங்கேணி, ஒலுமடுப்பகுதியில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 29.06.2026இன்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். குறிப்பாக இச்சந்திப்பில் கிராமத்தின் அபிவிருத்தி சார்ந்த...
IMF தூதுக் குழுவினருக்கும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று (30) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.ஜூன் 24 முதல் 30 வரை...
புத்தளத்தில் ஏரியில் மூழ்கி நன்கு மாணவர்கள் பலி!
புத்தளம் - வண்ணாத்திவில்லு பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நான்கு மாணவர்களும் தோணியில் தாமரை மலர்களைப் பறிக்கச்...
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷ்யாமிளா பெரேராவுக்குப் பிணை!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷ்யாமிளா பெரேராவை, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில்...
அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
அம்பாறை மாவட்ட விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30.06.2026) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் திருமதி எம். எம். முத்து...
கொடூரமான படுகொ*லைகளைச் செய்துவிட்டு பிள்ளையான் நல்லவர் போல நடிப்பது வேடிக்கையானது!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவர் கொடூரமான கொ*லைகளையும், பல்வேறு குற்றச் செயல்களையும் புரிந்தவர். அவருக்கான தக்க தண்டனையை நீதிமன்றம் நிச்சயம் வழங்கும் என்றும்...
மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்!
"மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வத்தின் மறைவு பத்திரிகைத்துறைக்கு மாத்திரமல்ல சமூகத்துக்கும் ஏற்பட்ட இழப்பு" என 'தினக்குரல்' பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் தெரிவித்தார். காலமான...
தேர்தல்களில் போட்டியிட முடியாத ஆபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எதிர்கொண்டுள்ள கடுமையான சட்ட மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு, அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து சுமூகமான சமரசத்துக்கு வருவதே ஒரே தீர்வு என்று நாடாளுமன்ற...










