• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அதிகளவு சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதால் உடனடியாக மறுவாழ்வு நிலையம் அமைக்கப்பட வேண்டும்.!

Mathavi by Mathavi
June 5, 2025
in இலங்கை செய்திகள்.
0
அதிகளவு சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதால் உடனடியாக மறுவாழ்வு நிலையம் அமைக்கப்பட வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில் புனர்வாழ்வு நிலையத்தை நிரந்தரமாக அமைக்கும் வரையில், இந்த மாத இறுதிக்குள் கைவிடப்பட்ட அரச கட்டடத்தில் தற்காலிகமாக அதனை ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (05.06.2025) நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், யாழ். மாவட்டத்தில் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது அவசியம் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையினரும் கோரி வருகின்றனர்.

கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் இதற்கான கட்டடம் எம்மால் அடையாளப்படுத்தப்பட்டபோதும் அது பொருத்தமானது அல்ல என அவர்கள் எமக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். மாற்று இடத்தை உடனடியாக அடையாளப்படுத்தி வழங்கவேண்டியுள்ளது. தற்போது அதிகளவு சிறுவர்களும் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாவதால் உடனடியாக மறுவாழ்வு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் குறிப்பிடுகையில், 15 – 18 வரையிலான வயதுடைய 36 சிறுவர்கள் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாகி நீதிமன்றத்தால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றார். அவர்களில் சிறுமிகளும் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது அச்சுவேலியில் சிறுவர் சான்றுபெற்ற பாடசாலைக்கு அண்மையாகவுள்ள வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்துக்குச் சொந்தமான கட்டடத்தை புனரமைப்புச் செய்து பயன்படுத்த முடியும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அது இயங்குநிலைக்கு வரும் வரையில் இந்த மாத இறுதிக்குள் உடனடியாக ஏதாவது ஓர் இடத்தை தற்காலிகமாக வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மூடப்பட்ட பாடசாலைகள் சில உள்ளன என்றும் அந்தக் கட்டடங்களை பார்வையிட்ட பின்னர் அவற்றில் செயற்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்டமருத்துவ அதிகாரி செ.பிரணவன், மாணவர்களிடையே உயிர்கொல்லி போதை மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது எனச் சுட்டிக்காட்டினார். சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது எனவும் குறிப்பிட்டார். உயிர்கொல்லி போதை மாத்திரையை வடக்குக்கு கொண்டு வரும் மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்திடமிருந்து அந்த மாத்திரைகள் விநியோகிக்கும் சங்கிலியை கண்காணித்து சோதனை செய்தாலே இதனை இலகுவாக கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். இதனை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தால் பாதுகாப்பு இல்லத்துக்காக அமைக்கப்பட்ட கட்டடத்தை மறுவாழ்வு நிலையத்துக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்டச் செயலர், வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், உளவள ஆலோசகர்கள், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் இணைப்பாளர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி ஆகியோர் நேரடியாகவும், வடக்கின் ஏனைய மாவட்டங்களின் மாவட்டச் செயலர்கள், பிரதேச செயலர்கள், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ஆகியோர் ‘சூம்’ செயலி ஊடாக இணைந்துகொண்டனர்.

Related Posts

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அடுத்த வருடம் நிதி ஒதுக்கப்படும்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அடுத்த வருடம் நிதி ஒதுக்கப்படும்!

by selvan
June 26, 2026
0

முல்லைத்தீவு மாவட்டம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில்மேலும் 2 எலும்புக்கூடுகள் அடையாளம்

நாட்டில் டெங்கு மரணம் 30 ஆக உயர்வு!

by selvan
June 25, 2026
0

டெங்கு நோயின் காரணமாக இந்த ஆண்டில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளபடி, இதுவரை நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள மொத்த...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: வடக்கு மாகாணத்தில்  566 மாணவர்கள் 9 ‘ஏ’ சித்தி

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு குறித்த மீள் திருத்த விண்ணப்பம் கோரப்படுகிறது

by selvan
June 25, 2026
0

அண்மையில் வௌியான 2025 (2026) கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்கள் இன்று (25) முதல் கோரப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின்...

ரகித மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்!

by selvan
June 25, 2026
0

கைது செய்யப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க...

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற இதுவரை காலவரையறை விதிக்கப்படவில்லை என அறிவிப்பு!

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற இதுவரை காலவரையறை விதிக்கப்படவில்லை என அறிவிப்பு!

by selvan
June 25, 2026
0

வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற இதுவரை காலவரையறை விதிக்கப்படவில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார். வரி செலுத்துநர் அடையாள...

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!

by selvan
June 25, 2026
0

கிளிநொச்சி, பச்சிளைப்பள்ளி வண்ணங்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதி வழியிலான சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும்...

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அமர்வு இன்றையதினம் இடம்பெற்றது!

by selvan
June 25, 2026
0

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அமர்வானது இன்றையதினம் (25.06.2026) சபையின் தவிசாளர் செல்வி இராசையா நளினி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உப தவிசாளர் சத்தியமூர்த்தி சத்தியவரதன் அவர்களால்...

மஸ்கெலியா நகரில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்!

by selvan
June 25, 2026
0

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்துடன் இணைந்து, மஸ்கெலியா பிரதேச சபையால் மஸ்கெலியா நகரில் சமீபத்தில் ஒரு டெங்கு ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மஸ்கெலியா நகரின் பிரதான வீதிகளில்...

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் விபத்து!

by selvan
June 25, 2026
0

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்த பகுதியில் ஒரு மோட்டார் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த வட்டவளை பொலிஸ் நிலைய...

போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு  சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்!

போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு  சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்!

by selvan
June 25, 2026
0

இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனை முறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி