• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 28, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

ஒற்றைக் காலில் பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை!

Sangeetha by Sangeetha
April 19, 2025
in இந்திய செய்திகள், விளையாட்டுச் செய்திகள்
0 0
0
ஒற்றைக் காலில் பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை!
Share on FacebookShare on Twitter

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீராங்கனை இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 11 மணி 05 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

பாக் ஜலசந்தி கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிறைந்த கடல் பகுதியாகும் .

இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் பாக் ஜலசந்தியை தனியாக நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ் கோடிக்கோ அல்லது தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்திச் சென்றவர்கள். இது தவிர மேலும் சிலர் குழுவாக ரிலே மற்றும் மாரத்தான் முறையில் பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் தலைமன்னார் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி கடப்பதற்காக கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் குழு இந்திய-இலங்கை இரு நாட்டு அரசிடமும் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்.

அனுமதி கிடைத்த நிலையில், நேற்று (18) ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் படகில் இலங்கை தலைமன்னார் நோக்கி சென்றனர்.

இந்த குழுவில் 8 பேர் ரிலே முறையில் நீந்தினர். இவர்கள் இலங்கை தலைமன்னாரில் இருந்து அதிகாலை 5.50க்கு கடலில் குதித்து நீந்த தொடங்கி மதியம் 2.20 மணி அளவில் தனுஷ்கோடி வந்தடைந்தனர்.இவர்கள் ரிலே முறையில் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 8 மணி நேரம் 30 நிமிடத்தில் நீந்தி கடந்தனர்.

மேலும் இருவர் தனியாக (SOLO) நீந்தி கடந்தனர். இவர்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள். இதில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சஷ்ருதி நக்காது என்ற நீச்சல் வீராங்கனைக்கு வலது காலில் பிறவி குறைபாடு காரணமாக மேல் மூட்டு துண்டிக்கப்பட்டு, செயற்கையாக வடிவமைக்கப்பட்ட காலை கொண்டு நடக்கும் மாற்றுத்திறனாளி.

இவர் முன்னதாக பாரா நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று பதக்கங்களை பெற்றுள்ள சஷ்ருதி நக்காது இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என இலங்கையிலுள்ள தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி சாதனை புரிவதற்காக வெள்ளிக்கிழமை அதிகாலை 5.50 மணி அளவில் தலைமன்னாரில் இருந்து கடலில் குதித்து நீந்த தொடங்கி மாலை 4.55 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை அடைந்தார். இந்த சாதனைக்காக 11 மணி 05 நிமிடங்கள் சஷ்ருதி நக்காது எடுத்துக் கொண்டார்.

அரிச்சல்முனை வந்தடைந்த சஷ்ருதி நக்காதவை அவரது தாய் கண்ணீர் மல்ல முத்தமிட்டு வரவேற்றார். அதனை தொடர்ந்து சுங்கதுறை கண்காணிப்பாளர், மரைன் போலீசார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதே போல மற்றொருவரான மாற்றுத்திறனாளி பல்கா கணேஷ் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை 10 மணி 30 நிமிடத்தில் நீந்தி கடந்தார்.

மாற்றுத்திறனாளியான பாரா நீச்சல் வீராங்கனை தலைமன்னாரில் இருந்து இன்று (19) அதிகாலை கடலில் குதித்து நீந்த தொடங்கிய போது ஜெல்லி மீன் மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக தொடர்ந்து நீந்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டது.

இருப்பினும் கடும் சிரமத்தை எதிர் கொண்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை அடைந்து சஷ்ருதி நக்காது சாதனை படைத்துள்ளார்.

ஒற்றைக் காலுடன் கடலில் நீந்திக் கடப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். முன்னதாக ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை நீந்தி கடந்து சாதனை படைத்த நிலையில் தற்போது ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி முதல் முறையாக தலைமன்னார் தனுஷ்கோடி பாக்நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளதாக இந்திய நீச்சல் கழகத்தின் பார்வையாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Thinakaran
408 720.9K
  • Videos
  • Playlists
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 1 day ago
  • தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றவர்கள் ஓட பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர்
    தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றவர்கள் ஓட பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர் 1 day ago
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! 4 days ago
  • 395 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Sangeetha

      Sangeetha

      Related Posts

      ராட்டினத்தில் சிக்கிய 30 பேர்! – சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பரபரப்பு

      ராட்டினத்தில் சிக்கிய 30 பேர்! – சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பரபரப்பு

      by Sangeetha
      May 28, 2025
      0

      சென்னை - ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பொழுது போக்கு மையத்தின் பெரிய ராட்டினத்தில் சிக்கிக் கொண்ட 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பிரபலமான பொழுது போக்கு...

      ஐபிஎல் வரலாற்றிலேயே புதிய சாதனை: அனைத்து அவே ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற முதல் அணியாக ஆர்சிபி!

      ஐபிஎல் வரலாற்றிலேயே புதிய சாதனை: அனைத்து அவே ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற முதல் அணியாக ஆர்சிபி!

      by Sangeetha
      May 28, 2025
      0

      ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது....

      திருவண்ணாமலை கோவிலின் பெயர் மாற்றப்படுவதாகப் பரப்பப்படும் தகவல் உண்மையா?

      திருவண்ணாமலை கோவிலின் பெயர் மாற்றப்படுவதாகப் பரப்பப்படும் தகவல் உண்மையா?

      by Sangeetha
      May 28, 2025
      0

      திருவண்ணாமலை கோவிலின் பெயர் படிப்படியாக அருணாசலேசுவரர் கோவில் என்று மாற்றப்படுவதாக ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக...

      கடன் சுமையால் குடும்பமே அழிந்தது – பகீர் தற்கொ லை சம்பவம்!

      கடன் சுமையால் குடும்பமே அழிந்தது – பகீர் தற்கொ லை சம்பவம்!

      by Sangeetha
      May 27, 2025
      0

      கடன் சுமையால் விஷம் குடித்து ஒரு குடும்பமே தற்கொலை.. காருக்குள் கிடந்த 7 உடல்கள் பகீர் சம்பவம் அரியானாவில் ஒரு முழு குடும்பமும் நிதி காரணமாக தற்கொலை...

      சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றுக்கு பிவி சிந்து முன்னேற்றம்

      சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றுக்கு பிவி சிந்து முன்னேற்றம்

      by Sangeetha
      May 27, 2025
      0

      மொத்தம் ரூ.82 கோடி பரிசுத் தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது....

      டி20 போட்டியில் புதிய வரலாறு படைத்த சூர்யகுமார் யாதவ்

      டி20 போட்டியில் புதிய வரலாறு படைத்த சூர்யகுமார் யாதவ்

      by Sangeetha
      May 27, 2025
      0

      ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில்...

      கர்நாடகாவில் கனமழை – 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது

      கர்நாடகாவில் கனமழை – 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது

      by Sangeetha
      May 27, 2025
      0

      கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கி கொட்டி வருகிறது. குறிப்பாக மலையோர மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை இடைவிடாமல் கொட்டி வருகிறது. இதன்...

      கல்முனை மாநகரசபை தீ அணைப்பு பிரிவு ஊழியர் Masters Athletics போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்.!

      கல்முனை மாநகரசபை தீ அணைப்பு பிரிவு ஊழியர் Masters Athletics போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்.!

      by Mathavi
      May 25, 2025
      0

      இலங்கையில் இடம்பெறும் Masters Athletics போட்டி இவ் ஆண்டிற்கான போட்டி கொழும்பு சுகததாச மைதானத்தில் 24,25ம் திகதிகளில் இடம்பெற்றது. இப் போட்டி நிகழ்ச்சியில் கல்முனை மாநகரசபை தீ...

      நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மூழ்கிய டெல்லி.!

      நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மூழ்கிய டெல்லி.!

      by Mathavi
      May 25, 2025
      0

      இந்திய தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சூழவுள்ள புறநகர்ப் பகுதிகளில் பெய்த கடும் மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாகப் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அத்துடன்,...

      Load More
      Next Post
      என்பிபி-யை அகற்ற தமிழ் கட்சிகளுக்கே வாக்களியுங்கள்: தவபாலன் வலியுறுத்தல்!

      என்பிபி-யை அகற்ற தமிழ் கட்சிகளுக்கே வாக்களியுங்கள்: தவபாலன் வலியுறுத்தல்!

      வவுனியாவில் அஞ்சலியுடன் ஆரம்பமான தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பரப்புரை!

      வவுனியாவில் அஞ்சலியுடன் ஆரம்பமான தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பரப்புரை!

      தியாகங்களால் கட்டமைக்கப்பட்ட விடுதலைத் தீயின் வீரியம் ஒருபோதும் ஓயாது – சிறீதரன் எம்.பி…!!!

      தியாகங்களால் கட்டமைக்கப்பட்ட விடுதலைத் தீயின் வீரியம் ஒருபோதும் ஓயாது – சிறீதரன் எம்.பி…!!!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி