• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இந்திய செய்திகள்

ராட்டினத்தில் சிக்கிய 30 பேர்! – சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பரபரப்பு

Sangeetha by Sangeetha
May 28, 2025
in இந்திய செய்திகள்
0 0
0
ராட்டினத்தில் சிக்கிய 30 பேர்! – சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பரபரப்பு
Share on FacebookShare on Twitter

சென்னை – ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பொழுது போக்கு மையத்தின் பெரிய ராட்டினத்தில் சிக்கிக் கொண்ட 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பிரபலமான பொழுது போக்கு மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக விளையாடும் வகையில் பல்வேறு விதமான ராட்டினங்கள் உள்ளன.

இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கூடி விளையாடி மகிழ்வதுண்டு. தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால் அந்த மையத்தில் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை பொழுது போக்கு மையத்தில் இருந்த `டாப் கன்’ எனும் ராட்சத ராட்டினம் ஒன்றில் சுமார் 30 பேர் 120 அடி உயரத்தில் அந்தரத்தில் சிக்கிக் கொண்டனர்.

ADVERTISEMENT

ராட்டினத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் அவர்களால் கீழே இறங்க முடியவில்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். மேலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களை மீட்க வேண்டுமென உதவி கோரினர்.

தகவலறிந்த நீலாங்கரை காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ராட்சத இயந்திரத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மீட்பு பணியானது நீண்டு கொண்டே சென்றதால் அவர்களிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு வழியாக 3 மணி நேரத்திற்கு மேல் நடந்த மீட்பு பணியில் முதலில் 14 பேர் மீட்கப்பட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 36 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

இந்த ராட்டினத்தில் மேல் வரிசையில் 15 பேர், கீழ் வரிசையில் 15 பேர் என மொத்தம் 30 பேர் பயணிக்க முடியும். நேற்று மாலை 8 சிறுவர்கள், 10 பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் ராட்டினத்தில் ஏறினர். மாலை 7 மணியளவில் மேலே சென்ற ராட்டினம் தொழில்நுட்ப கோளாறால் அங்கேயே தடைபட்டு நின்றது. இதனால் 120 அடி உயரத்தில் 30 பேரும் அந்தரத்தில் சிக்கிக் கொண்டு கதறினர். இதை கீழேயிருந்து பார்த்துக்கொண்டிருந்த மக்களும் பீதியடைந்து கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக, தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் ராட்சத ராட்டினத்தில் அந்தரத்தில் தொங்கியபடி இருந்தனர். தொழில்நுட்ப கோளாறு சரியாகவில்லை. இதைத்தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீலாங்கரை போலீசாரும் துரைப்பாக்கம், கிண்டி, நீலாங்கரை தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு ராட்சத கிரேன் மூலம் பிஸ்கட், குளிர்பானம் உள்ளிட்டவை வழங்கப் பட்டன. தீயணைப்பு துறையின் ராட்சத ஏணி மூலம் 3 மணி நேரத்துக்கு பின் ராட்டினத்தில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Posts

அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு!

அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு!

by Sangeetha
June 12, 2025
0

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில்...

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.12.33 கோடி பரிசு

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.12.33 கோடி பரிசு

by Sangeetha
June 12, 2025
0

ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.30.80 கோடி பரிசு தொகை வழங்கப்படும். இது முந்தைய சீசனை விட...

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு எதிராக முறைப்பாடு!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு எதிராக முறைப்பாடு!

by Sangeetha
June 12, 2025
0

கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அணைப்பது, அனுமதி இன்றி தொடுவது போன்ற தகாத செயலில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் ஈடுபட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது....

இலங்கையைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்..!

இலங்கையைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்..!

by Thamil
June 9, 2025
0

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் உள்ள கண்டி - கம்பளை பகுதியைச்...

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.10 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சா ராமேஸ்வரம் கடற்கரையில் மீட்பு; 6 பேர் கைது

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.10 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சா ராமேஸ்வரம் கடற்கரையில் மீட்பு; 6 பேர் கைது

by Sangeetha
June 8, 2025
0

சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் நேற்று சனிக்கிழமை(7) காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த .10 லட்சம்...

உலகின் உயரமான ரெயில்வே பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

உலகின் உயரமான ரெயில்வே பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

by Sangeetha
June 7, 2025
0

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்கிறார். பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணத்தை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்...

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழப்பு

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழப்பு

by Sangeetha
June 5, 2025
0

பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ஐபிஎல் வெற்றி கொண்டாத்திற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று...

இந்தியாவில் கொரோனா தாக்கம்: பாதித்தோர் எண்ணிக்கை 4000 பேராக உயர்ந்தது!

இந்தியாவில் கொரோனா தாக்கம்: பாதித்தோர் எண்ணிக்கை 4000 பேராக உயர்ந்தது!

by Sangeetha
June 3, 2025
0

2019-ம் ஆண்டு உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்று, மீண்டும் மீண்டும் புதுப்புது வடிவங்களில் உருமாறி மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. தற்போதும் ஒரு புதிய வடிவத்தில் வந்துள்ளது....

இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏலக்காய் பறிமுதல்.!

இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏலக்காய் பறிமுதல்.!

by Mathavi
May 30, 2025
0

தங்கச்சிமடம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான 175 கிலோ ஏலக்காய் மூட்டைகளை இன்று (30) அதிகாலை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி