தினகரன்
வணக்கம் வாசகர்களே.!
தினகரன் ஆசிரியர் பீடம்
ஊடக அடக்குமுறை சம்பந்தமான மிரட்டல்களையும், ஆதாரங்களையும் உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
Thinakaran.com இணையத்தளம் உடனுக்குடன் செய்திகளை தெள்ளத் தெளிவாக வழங்கி வருவதை யாவரும் அறிந்ததே. எமது இணையத்தளத்தின் செயற்பாடுகளை முடக்கும் நோக்குடன் தினகரன்.lk எனும் ஊடகமானது அரச ஊதுகுழலாக செயற்படுவதை யாவரும் அறிவீர். சமீபத்தில் எமது இணையத்தள ஆசிரியர் தொலைபேசிக்கு மிரட்டல் செய்தி ஒன்றினை விடுத்திருந்தார்கள். தினகரன்.com எனும் இணையத்தளத்தை பிரதி எனவும் குறிப்பிட்டு முடக்க முயற்சித்து இருந்தார்கள். பின்னர் நாம் அதனை சரி செய்து எமது இணையத்தளத்தை வழமைக்கு கொண்டு வந்தோம்.
நேற்றையதினம் (18) எமது இணையத்தளம் மீது மறுபடியும் விசமத்தனமான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்கள். சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் எமது முகநூல் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து தடை உத்தரவு கோரியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் விளிப்புடன் செயற்படுங்கள். Thinakaran.com இணையத்தளமானது அரச பயங்கரவாத நிகழ்வுகளை, அடக்குமுறைகளை வெளிக்கொண்டுவரும் முகமாக பல பதிவுகளையும் செய்திகளையும் வெளியிட்டு வருவதை யாவரும் அறிவீர். எமது நோக்கம் அடக்குமுறைகளையும் மக்களின் அன்றாட நிகழ்வுகளையும் நாட்டில் நடைபெறும் குற்றச் செயல்களையும் வெளிக்கொண்டு வருவதாகும். வாரமலர் மற்றும் .lk அரச ஊதுகுழல் என மக்களால் வர்ணிக்கப்பட்ட ஒரு ஊடகம் ஆகும்.
இவர்களின் மிரட்டல்களுக்கு நாம் அடிபணிந்து போகமாட்டோம். நாட்டில் எவ்வளவோ கொலைக் குற்றவாளிகள், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சுதந்திரமாகவும் உல்லாசமாகவும் உள்ளார்கள். அவர்களை உங்களால் முடிந்தால் அம்பலப்படுத்தி சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.
ஆசிரியர் பீடத்திற்கு,
இப்படிப்பட்ட பொறுப்பற்ற அதிகாரிகளின் செயலால் தான் இந்த நாடு அகல பாதாளத்தில் போய் மீள முடியாது பிச்சை எடுத்துக்கொண்டு திரிகிறார்கள். இப்படிப்பட்ட பொறுப்பற்ற செயலை நிறுத்துங்கள்.
ஊடகம் சுதந்திரமாக செயற்பட வேண்டும். அது அரசின் பொறுப்பாகும். இதனை அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் அறியத்தருகின்றோம்.
தினகரன் ஆசிரியர் பீடம்
இது தொடர்பில் உமது கருத்துக்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.


