கம்பஹா மாவட்டம் கொட்டதெனியாவ, கொன்தராதுவ பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மெல்லவகெதர பகுதியில் வசிக்கும் 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) மாலை கொட்டதெனியாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
சந்தேக நபர்களிடமிருந்து 67 லீற்றர் சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டதெனியாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.