சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் ‘சர்வதேச மகளிர் தின நிகழ்வு’ கமு/அல்-ஜலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் பொலிஸ் நிலைய பொலிஸ் சார்ஜன் எஸ்.ரி.பாறூக் (43890) இன் தலைமையில் நடைபெற்றது.
இங்கு சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட மகளிர் மகா சங்க உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் மற்றும் விசேட அதிதியாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சஞ்ஜீவனி (7834) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் பொலிஸ் சார்ஜன் எஸ்.ரி.மக்பூல் (43383), சாய்ந்தமருது பிரதேச செயக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.முஸ்பிறா, உளவளத்துணை உத்தியோகத்தர் எஸ்.எச்.எம்.சியாம் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இம்முறை ‘பெண்கள் உரிமைகள் குறித்து விழிப்புடன் இருப்போம்’ என்ற தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இங்கு மகளிர் மகா சங்க செயலாளர் ஏ.ஜே.மர்ஜானா பெண்கள் தொடர்பான கவிதையினை வாசித்தார்.
மேலும் வீட்டு வன்முறை, பால்நிலை சமத்துவம் மற்றும் மகளிர் தின நிகழ்வு தொடர்பான விழிப்புணர்வு மகளிர் பற்றிய சட்டங்கள், குற்றங்கள், பாதிப்பு மற்றும் போதைப் பொருளினால் சீரழியும் குடும்பங்கள் பற்றிய விழிப்புணர்வு உரை, உட்பட பல நிகழ்வுகள் இடம்பெற்றன.



