அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று நேற்றைய தினம் (09) வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இயங்கி வரும் முதியோர் இல்லத்துக்கு முன்பிருந்த வாகன நிறுத்துமிடத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
கீழே விழுந்த சிறுது நேரத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. விபத்தில் சிக்கிய விமானத்தில் ஐந்து பேர் இருந்தனர். அவர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்ட அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விமானம் தீப்பிடித்ததை அடுத்து வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பத்துக்கும் மேற்பட்ட கார்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சிறிய ரக விமானம் விபத்தில் சிக்க என்ன காரணம் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகத நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Posts
ஈரான் மீது பதிலடித் தாக்குதல் நடத்த வேண்டாம் – நெதன்யாகுவை எச்சரித்த ட்ரம்ப்!
வடக்கு இஸ்ரேல் மீது தெஹ்ரானில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைத் தொடர்பு கொண்டு, ஈரான் மீது பதிலடித் தாக்குதல் நடத்த...
தாக்குதல்கள் தொடர்ந்தால் ‘பரந்த’ அளவிலான பதிலடி தரப்படும் – ஈரான் எச்சரிக்கை
"அனைத்து முனைகளிலும் போர்நிறுத்தம்" என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே அமெரிக்காவுடனான போர்நிறுத்தத்தை தாம் ஏற்றுக்கொண்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்காவும் இஸ்ரேலும் லெபனான் மீது...
இஸ்ரேலில் சிற்றூந்து மூலம் சென்று துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, ஐந்து பேர் காயம்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை எல்லைக்கு அருகில் உள்ள இஸ்ரேலின் மூன்று பகுதிகளில், சிற்றூந்தில் வந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து...
ஈரான் – இஸ்ரேல் பரஸ்பரத் தாக்குதல் – மத்திய கிழக்கில் வலுக்கும் போர்!
ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள அந்த நாட்டு ஆட்சிக்குச் சொந்தமான இராணுவ இலக்குகளைத் தமது வான்படை தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்கள்...
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
பிலிப்பைன்ஸில் இன்று (08) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்களை அழித்ததோடு, ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கைகளையும் தூண்டியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாகவும், பலர்...
குடியேற்ற ஒடுக்குமுறை திட்டத்துக்கு 70 பில்லியன் டொலர் நிதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடியேற்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்காக 70 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி அளிப்பதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது....
சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் உயிரிழந்த 49 பேரின் உடல்கள் மீட்பு!
சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானதால், அதில் பயணித்த 49 பேர் கடும் தாகம் காரணமாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் நேற்று...
எரிபொருள், உர விலைகள் விரைவில் குறையும்” – டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை
எரிபொருள் மற்றும் உரம் விலைகள் விரைவில் குறையும் என்று எதிர்பார்ப்பதாகத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். விஸ்கான்சின் மாநிலத்தின் சிப்பேவா பால்ஸ் பகுதியில் உள்ள விவசாயிகளிடம்...
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வட கொரியாவிற்கு பயணம்
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அடுத்த வாரம் வட கொரியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த இரண்டு நாள் அரசமுறைப் பயணத்தின்போது, சீன...
புட்டினுக்கு பகிரங்க கடிதம் – நேருக்கு நேர் சந்திப்பை முன்மொழிந்த உக்ரேன் ஜனாதிபதி!
உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), வியாழக்கிழமை (04) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடித்தில் அவர், முழுமையான போர்...









