சுமார் 58 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த இரு பயணிகள் வியாழக்கிழமை (06) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்களில் ஒருவர் 42 வயதுடைய பெண், இந்த சிகரெட்டுகளை கொண்டு செல்வதற்காகவே நாட்டிற்கு வந்துள்ளார்.
மற்றொரு நபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் பணிபுரியும் 23 வயது நபர் என தெரிவித்துள்ளனர்.
சுமார் 39,200 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளைக் கொண்ட 196 சிகரெட் அட்டைப்பெட்டிகளை எடுத்துச் சென்ற போது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவருக்கும் பொலிஸ் பிணை விடுவிக்கப்பட்டு, நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.