தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அளம்பில் வடக்கு, அளம்பில் தெற்கு பகுதி கடற்கரையை சுத்தம் செய்யும் பணி இன்று (23.02.2025) காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றிருந்தது.
“சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்துவதற்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுமார் 20 கடற்கரை பிரதேசங்களில் தூய்மைப்படுத்தும் குறித்த வேலைத்திட்டம் இன்றையதினம் காலை ஆரம்பமாகிய நிலையில் முல்லைத்தீவு அளம்பில் வடக்கு, தெற்கு பகுதியில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அளம்பில் வடக்கு கிராம சேவையாளர் ஜீவன்ராஜ் தலைமையில் ஆரம்பமாகிய தூய்மைப்படுத்தும் நிகழ்வில் அளம்பில் தெற்கு கிராம சேவையாளர் காளிங்கராஜா, அளம்பில் வடக்கு கிராம சேவையாளர் ஜீவன்ராஜ், அளம்பில் வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் வசந்தகுமார், அளம்பில் தெற்கு சமுர்த்தி உத்தியோகத்தர் கொட்வின், மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சந்திரிக்கா, ஸ்ரீலங்கா சிங்க ரெஜிமண்ட் 10 ஆவது படையணியின் இராணுவ அதிகாரி மேஜர் மாறசிங்க, மற்றும் இராணுவத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.





