• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

முல்லை மாவட்ட சுகாதாரத்துறை தேவைகளைப் பூர்த்திசெய்க; ரவிகரன் எம்.பி கோரிக்கை.!

Mathavi by Mathavi
February 19, 2025
in இலங்கை செய்திகள்., முல்லைதீவு செய்திகள்
0
முல்லை மாவட்ட சுகாதாரத்துறை தேவைகளைப் பூர்த்திசெய்க; ரவிகரன் எம்.பி கோரிக்கை.!
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் காணப்படும் பல வைத்தியசாலைளிலும் உள்ள குறைபாடுகள் தொடர்பிலும், தேவைப்பாடுகள் தொடர்பிலும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் முன்வைப்புக்களை செய்ததுடன், குறித்த தேவைப்பாடுகளை உடனடியாக நிறைவேற்றித்தருமாறும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக மருந்துக்கலவையாளர்களின் ஆளணிப் பற்றாக்குறை, வைத்தியாசாலைகளில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைகளைப் பூர்த்திசெய்தல், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் நிலவும் வைத்திய நிபுணர், ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் மற்றும் எக்ஸ் கதிர் படப்பிடிப்பாளர்களின் தேவைப்பாடுகள், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் காணப்படும் வைத்திய நிபுணர் மற்றும், துணை மருத்துவப் பணியாளர் தேவைப்பாடுகள், அளம்பில் பிரதேச வைத்தியசாலைக்கான நோயாளர் காவு வண்டித் தேவைப்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது முன்வைப்புக்களைச் செய்துள்ளார்.

முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையால் முன்வைக்கப்பட்ட தேவைப்பாடுகள் குறித்தே இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று (18.02.2025) இடம்பெற்ற வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் காணப்படும் மருந்துக் கலவையாளர்களின் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

மருந்துக் கலவையாளர்கள் சுகாதார சேவையில் முக்கிய இடம் வகிக்கின்றார்கள். மருந்து வழங்கல், சத்திரசிகிச்சைப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள் என்பவற்றின் பொருட்பதிவேட்டைப் பேணல், மருந்துக் கையிருப்பைப் பேணல், மருந்துக் களஞ்சியத்தைப் பேணல் என்பன அவர்களின் முக்கிய பணியாகும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மருந்துக் கலவையாளர் ஆளணி 34 ஆகும். ஆயினும் தற்போது உள்ள மருந்துக் கலவையாளர்களின் எண்ணிக்கை 13 மட்டுமே ஆகும்.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மருந்துக் கலவையாளர்களுக்கான ஆட்சேர்ப்பு பயிற்சி நெறிகள் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படவில்லை.

எமது சில மருத்துவமனைகளின் மருந்துக் கலவையாளர்களின் பணியானது மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையில் வேறு ஊழியர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இந்நிலையானது நோயாளர் பாதுகாப்பு மற்றும் தரம் என்பவற்றில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே மருந்துக் கலவையாளர் பயிற்சி நெறியை விரைவாக ஆரம்பித்து ஓர் அணியினரைப் பயிற்றுவித்து வெற்றிடங்களை நிரப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அத்தோடு மருந்துக் கலவையாளர் வெற்றிடங்களுக்கு மருந்தாளர் கொண்டு நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

வைத்தியசாலைகளின் ஆளணி மீளாய்வு செய்யப்பட்டு வைத்தியசாலைகளில் காணப்படும் ஆளணிப்பற்றாக்குறைகள் நிரப்பப்படவேண்டிய தேவைகளும் காணப்படுகின்றன.

காலத்துக்குக் காலம் தேவைகளுக்கும் புறநிலை மாற்றங்களுக்கும் அமைவாக சுகாதார சேவையின் ஆளணியினர் விரிவாக்கப்படல் வேண்டும்.

தீர்க்கமான ஓர் ஆளணி விரிவாக்கமானது இறுதியாக 2013 ஆம் ஆண்டு நடைபெற்றது. கடைசியாக நடைபெற்ற அவ் ஆளணி விரிவாக்கத்தில் கூட தரமுயர்த்தப்பட்ட ஆதார வைத்தியசாலைகள் மற்றும் பிரதேச வைத்தியசாலைகள் என்பவற்றின் ஆளணியினர் அதற்கேற்ற வகையில் விரிவாக்கப்படவில்லை. குறிப்பாக தரமுயர்த்தப்பட்ட ஆதார மருத்துவமனைகள் இன்னமும் பிரதேச மருத்துவமனைகளின் ஆளணியினருடனேயே இயங்குகின்றது. எனவே தரமுயர்த்தப்பட்ட ஆதார வைத்தியசாலை மட்டத்துக்கான சேவைகளை வழங்க ஆளணிகளை பூர்த்திசெய்துதருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இந்தக் குறைபாடு காரணமாக மருத்துவ நிருவாகத்துக்கும் பொதுமக்களுக்குமான முரண் நிலைகள் உருவாகுவதுடன் நோயாளர் பராமரிப்பு சேவை வழங்கலும் பாதிப்படைகின்றது.
ஆளணி விரிவாக்கத்திற்கான தொடக்க முயற்சிகள் தற்போது மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.

எனவே ஆளணி விரிவாக்க நடவடிக்கைகளை விரைவாக முழுமைப்படுத்துவதுடன் விரிவாக்கப்பட்ட ஆளணிக்குரிய பணியமர்த்தல்களை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஆளணி விரிவாக்கத்தின் போது, அதற்கான நியமங்களை வடிவமைக்கும் போது, மருத்துவமனைகளின் புவியியல் நிலைகள் மற்றும் உள்ளக அமைவுகள் என்பனவற்றையும் கருத்திற் கொள்ளவேண்டும்.

அதேவேளை புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைத்திய நிபுணர், ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் மற்றும் எக்ஸ் கதிர் படப்பிடிப்பாளர்களின் தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.

புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையானது கேந்திர முக்கியத்துவமான இடத்தில் அமைந்துள்ளதுடன் இம்மாவட்டத்தின் மூன்றில் ஒரு பங்கு சனத்தொகைக்கான சேவைகளை வழங்கி வருகின்றது.

ஆயினும் இம்மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்களின் சேவைகள் மற்றும் முக்கிய துணை மருத்துவப் பணிகளான மருத்துவ ஆய்வுகூட தொழினுட்பவியலாளர் மற்றும் எக்ஸ் கதிர் படப்பிடிப்பாளர் ஆகியோர் இல்லாத நிலையே உள்ளது.

எனவே பொது வைத்திய நிபுணர் ஒருவரை விரைவாக நியமிக்க நடவடிக்கை எடுப்பதுடன், மருத்துவ ஆய்வுகூட தொழினுட்பவியலாளர், எக்சு கதிர் படப்பிடிப்பாளர் ஆகியோரை விரைவாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றேன்.

இந் நிலையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் மற்றும், துணை மருத்துவப் பணியாளர் தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.

மாங்குளம் ஆதார மருத்துவமனையானது ஓர் (A)தரத்திலான ஆதார மருத்துவமனையாகும். மாகாணத்திற்குரிய புணர்வாழ்வு மருத்துவ அலகினையும் இது கொண்டுள்ளது.

ஏ9 நெடுஞ்சாலையில் கேந்திர முக்கியமான இடத்தில் இது அமைந்துள்ளதால் இம் மருத்துவமனை முக்கியத்துவம் பெறுகின்றது. அண்மைய நெதர்லாந்து அரசின் VAMED செயற்றிட்டத்தின் மூலம் இதன் சேவைப்பரப்பு இன்னும் கணிசமாக விரிவடைந்து நோயாளர் சேவை இடம்பெறுகின்றது.

ஓர் (A)தரத்திலான ஆதார மருத்துவமனையாக இருப்பதால், அனைத்து முக்கிய மருத்துவ நிபுணத்துவ சேவைப் பிரிவுகளும், துணை மருத்தவ சேவைகளும் இங்கு அமைதல் வேண்டும்.

ஆனால் இந்த ஆதார மருத்துவமனையானது மகப்பேற்று மருத்துவர், குழந்தைகள் சிகிச்சை நிபுணர், மூட்டு வாத சிகிச்சை நிபுணர் மற்றும் முக்கிய துணை மருத்துவப் பணிகளான இயன் மருத்துவ சிகிச்சையாளர், மற்றும் X கதிர் படப்பிடிப்பாளர் சேவை என்பன இல்லாத நிலையிலேயே தற்போது இயங்கி வருகின்றது.

எனவே மகப்பேற்று மருத்துவர், குழந்தைகள் சிகிச்சை நிபுணர், மூட்டுவாத சிகிச்சை நிபுணர் ஆகியோரின் நியமனத்தை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அத்தோடு முக்கிய துணை மருத்துவப் பணிகளான இயன் மருத்துவ சிகிச்சையாளர், X கதிர் படப்பிடிப்பாளர் ஆகியோரின் நியமனத்துக்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் அளம்பில் பிரதேச வைத்தியசாலைக்கான நோயாளர் காவு வண்டி மற்றும் மணலாறு சுகாதார வைத்திய அதிகாரிக்கான வாகன தேவைப்பாடுளும் காணப்படுகின்றன.

அளம்பில் பிரதேச மருத்துவமனை ஒரு நோயாளர் காவுவண்டி இல்லாமலேயே இயங்கி வருகின்றது. இது முல்லைத்தீவில் இருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.

இம் மருத்துவமனைக்கான நோயாளர் காவுவண்டிச் சேவைகள் இதர மருத்துவமனைகளான கொக்கிளார் பிரதேச மருத்துவமனை (22கி.மீ.), சம்பத்துநவர பிரதேச மருத்துவமனை (35 கி.மீ.) மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும் அளம்பில் மற்றும் மணலாறு ஆகிய இரண்டு சேவை இடங்களும் மிகக்குறைவான பொதுப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இடங்களாகும்.

ஆகவே அளம்பில் பிரதேச மருத்துவமனைக்குரிய நோயாளர் காவு வண்டி ஒன்றை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

Related Posts

மஸ்கெலியாவில் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன

மஸ்கெலியாவில் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன

by selvan
May 30, 2026
0

மஸ்கெலியாவில் இன்றைய தினம் சிறப்பு வெசாக் ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2570 வது வைசாத்தி மங்கள்ய வருடத்தை முன்னிட்டு சுமனாராம விகாரையின் பௌத்த மத குரு தப்போவன...

தமது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி தையிட்டியில் போராட்டம்!

தமது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி தையிட்டியில் போராட்டம்!

by selvan
May 30, 2026
0

யாழ். தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தங்களது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி, நேற்றும் இன்றும் காணி உரிமையாளர்கள் தொடர்...

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இருவருக்கு சுமந்திரன் நிதியுதவி

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இருவருக்கு சுமந்திரன் நிதியுதவி

by selvan
May 30, 2026
0

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி கோரியிருந்த முன்னாள் போராளி எதிர்மன்னசிங்கம் கிரேசியனை, இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நேரில்...

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

by selvan
May 30, 2026
0

இலங்கையின் பல பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோர வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கேகாலையின் ருவன்வெல்ல பொலிஸ்...

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

by selvan
May 30, 2026
0

இலங்கை இராணுவத்தின் 69ஆவது பதவி நிலை பிரதானியாக இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசேட உயர் பதவி நியமனமானது...

தையிட்டி விகாரையை படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது.!

தையிட்டி விகாரையை படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது.!

by Mathavi
May 30, 2026
0

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பலாலி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்....

தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம்; ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் தீவிர விசாரணை.!

தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம்; ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் தீவிர விசாரணை.!

by Mathavi
May 30, 2026
0

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு ஊடகங்களில் வெளியானமை தொடர்பில், ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் முல்லைத்தீவு பொலிஸார் நேற்றையதினம் (29) மீண்டும்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

by selvan
May 30, 2026
0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், பெருமளவிலான 'குஷ்' போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

ஹட்டன் ஸ்ரீ நிக்கோதாராமய விகாரையில் விசேட நிகழ்வு.!

ஹட்டன் ஸ்ரீ நிக்கோதாராமய விகாரையில் விசேட நிகழ்வு.!

by Mathavi
May 30, 2026
0

2570 வருடத்தை யொட்டியும் வெசாக் பௌர்ணமி தினத்தன்று இன்று காலை முதல் சம் புத்த பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதன்போது அங்கு ஸ்ரீ நிக்கோதாராமய விகாரையின்...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

by Mathavi
May 30, 2026
0

நெல்லியடி - பருத்தித்துறை பிரதான வீதியில், ரூபின்ஸ் வைத்தியசாலைக்கு அருகில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி