வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தவறான முடிவெடுத்து அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
26 வயதுடைய தனுசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
ADVERTISEMENT
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
