முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பிரதான பேருந்து தரிப்பிடமானது இதுவரை பொதுமக்களுக்கான பயன்பாட்டில் இல்லாமல் காணப்படுகிறது.
குறித்த பேருந்து தரிப்பிடமானது அரச நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது கால்நடைகளின் உறைவிடமாக மாறியுள்ளது.
அத்துடன், குறித்த பேருந்து தரிப்பிடத்தில் உள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்களுக்குரிய மலசலகூட வசதிகள் இல்லை எனவும், கிணறு இருந்தாலும் அந்த கிணற்றில் உள்ள நீரானது பாவனைக்கு உகந்ததாகவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனவே குறித்த பேருந்து தரிப்பிடத்தை மீளவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது அப் பிரதேச மக்களின் கோரிக்கையாக உள்ளது.


