கடுவலை பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றிற்குள் நேற்று செவ்வாய்க்கிழமை (11) மாலை அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர்கள் சிலர், தேசிய மாணவர் படை பயிற்சியில் ஈடுபட்டிருந்த 11 மாணவ, மாணவிகளை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மாணவ, மாணவிகள் நவகமுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர் நவகமுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் நவகமுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.