கிளிநொச்சி புளியம் பொக்கனை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட முசிரம்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பொது கிணற்றில் பாய்ந்து இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
இன்று 12.02.2025 இடம்பெற்ற இச் சம்பவத்தில் 29 வயதுடைய சற்குணராசா பிரதீபன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
ADVERTISEMENT
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்கா க கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

