நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் துண்டிப்பால் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் மதிப்பீடுகளை முன்னெடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“மின்சக்தி அமைச்சும், இலங்கை மின்சார சபையும், மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமும் மின் வெட்டு தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளன. மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையற்ற தன்மை தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும்போது அவற்றுக்கு நிரந்தர தீர்வை வழங்குவதற்கு உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. குறுகிய கால நடவடிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மின் தடையால் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் இதுவரையில் மின்சார சபை எவ்வித அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை.
நட்டம் தொடர்பில் மதிப்பீடுகளை முன்னெடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.” – என்றார்.