அலாஸ்காவில் 10 பேருடன் காணாமல் போன விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (06) ஒன்பது பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் உனலக்லீட்டில் இருந்து நோம் நோக்கி பயணித்த விமானம் அலாஸ்காவில் காணாமல் போனது. குறித்த விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
பனிபடர்ந்த பகுதியில் மீட்கப்பட்ட விமானத்திற்குள் இருந்து மூன்று உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போன ஏனைய ஏழு பேரையும் தேடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தின் சிதைவுகள் நோம் நகரிலிருந்து 34 மைல் தொலைவில் காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக விமானத்தைத் தேடும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.